IRCTC: ரயிலில் டிக்கெட் போடும் போது இது மறக்கிறதா... ஈஸியா புக் செய்ய இதை பாருங்க!

Indian Railways Update : ஆன்லைன் மூலம் ரயிலில் ஒவ்வொரு முறையும் டிக்கெட் எடுக்க வேண்டிய நிலையில், ஒவ்வொரு முறையும் பயனர் ஐடி, பாஸ்வேர்டை உள்ளீடு செய்ய வேண்டும். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 28, 2023, 08:56 AM IST
  • பல சமயங்களில் நம் ஐடி மற்றும் பாஸ்வேர்டை மறந்து விடுகிறோம்.
  • எப்போது வேண்டுமானாலும் உங்கள் பாஸ்வேர்டை மாற்றலாம்.
  • IRCTC கணக்கு திறக்க மின்னஞ்சல் அவசியமாகிறது.
IRCTC: ரயிலில் டிக்கெட் போடும் போது இது மறக்கிறதா... ஈஸியா புக் செய்ய இதை பாருங்க! title=

IRCTC Password Update: தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். முன்பெல்லாம் ரயிலில் டிக்கெட் எடுக்க நெடும் வரிசையில் மக்கள் நிற்க வேண்டியிருந்தது. டிக்கெட் முன்பதிவு முதல் தட்கல் வரை மக்கள் நின்றுக்கொண்டே காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்குவார்கள். 

ஆனால், இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் மக்கள் வீட்டில் அமர்ந்துகொண்டே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள். வெகு சிலரே கவுன்டரில் சென்று டிக்கெட் எடுக்கின்றனர். IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான எளிதான வழிகள் உள்ளன. 

இங்கு நமது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். ஆனால் பல சமயங்களில் நம் ஐடி மற்றும் பாஸ்வேர்டை மறந்து விடுகிறோம். எனவே ஐடி மற்றும் பாஸ்வேர்டை மீட்டெடுப்பதற்கான வழியை இங்கே காணலாம். இது இணையதளம் மட்டுமின்றி, மொபைல் செயலியின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், இதேபோல் IRCTC ஐடி மற்றும் பாஸ்வேர்ட் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்  

பாஸ்வேர்டை மாற்றுவது எளிது

உங்கள் IRCTC கணக்கின் பாஸ்வேர்டை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் அல்லது மீட்டெடுக்கலாம். ஆனால் IRCTC-இல் கணக்கை உருவாக்க ஜிமெயில் கணக்கு வைத்திருப்பது மிகவும் முக்கியம். உங்களிடம் ஜிமெயில் கணக்கு இல்லையென்றால், முதலில் ஜிமெயிலை உருவாக்க வேண்டும். மேலும் படிக்க | Indian Railways: நாட்டின் முதல் ஏசி ரயில்... ‘சில’ சுவாரஸ்ய தகவல்கள்!

IRCTC இல் கணக்கை உருவாக்குவது எப்படி?

- முதலில் ரயில்வே இணையதளமான www.irctc.co.in பக்கத்தைத் திறக்கவும்.
- நீங்கள் IRCTC பக்கத்தைத் திறந்தால், நீங்கள் கிளிக் செய்ய வேண்டிய இடத்தில் New Registration என்ற ஆப்ஷன் தோன்றும்.
- New Registration ஆப்ஷனை கிளிக் செய்த பிறகு, சில விவரங்கள் கேட்கப்படும்.
- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
- கடைசியாக கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும்.
- இப்போது உங்கள் ஜிமெயிலில் சரிபார்ப்பு அஞ்சல் வரும்.

மொபைலில் இருந்து IRCTC கணக்கை உருவாக்குவது எப்படி?

- கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து IRCTC செயலியை பதிவிறக்கவும்.
- செயலியில் பதிவிறக்கிய பிறகு, நீங்கள் அனுமதிக்க வேண்டிய சில அனுமதிகள் கேட்கப்படும்.
- அதன் பிறகு New Registration என்பதைக் கிளிக் செய்யவும்.
- புதிய பதிவு விருப்பத்தை கிளிக் செய்த பிறகு, நீங்கள் நிரப்ப வேண்டிய சில கேள்விகள் கேட்கப்படும்.
- இதற்குப் பிறகு உங்கள் IRCTC கணக்கு உருவாக்கப்படும்.

IRCTC கடவுச்சொல்லை இப்படி மாற்றவும்

- IRCTC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான irctc.co.in பக்கத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள 'Forgot Password' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- உங்கள் IRCTC பயனர் ஐடி, பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு 'Next' என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
- பயனர் OTP, புதிய பாஸ்வேர்ட் உள்ளிட வேண்டிய இடத்தில் ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- இதற்குப் பிறகு, உங்கள் புதிய கடவுச்சொல்லை உள்ளிட்டு, கேப்ட்சாவைக் கிளிக் செய்து கடவுச்சொல்லை புதுப்பிக்கவும்.
- உங்கள் புதிய கடவுச்சொல் புதுப்பிக்கப்படும்.

மேலும் படிக்க | Indian Railways பயணிகளுக்கு முக்கிய அப்டேட்: இவங்களுக்குதான் லோயர் பர்த்.. அமைச்சர் அளித்த தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News