சனியின் நட்சத்திர மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களின் கதி இதுதான்

பிப்ரவரி 2022: சனியின் பார்வையில் 2022 முக்கியமானது. சனியின் பெயர்ச்சி ராசியில் நடக்க உல்ல நிலையில் தற்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சி நடக்க உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 27, 2022, 12:13 PM IST
  • சனி நட்சத்திர பெயர்ச்சி யாருக்கு சாதகம்
  • சனி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.
  • கும்ப ராசியின் அதிபதி சனி பகவான்
சனியின் நட்சத்திர மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களின் கதி இதுதான் title=

2022 இல் சனி நட்சத்திரப் பெயர்ச்சி: ஜோதிடத்தில், சனியின் ராசி மாற்றங்கள் மற்றும் நட்சத்திர மாற்றங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சனியின் இயக்கம் மிகவும் மெதுவாக கருதப்படுகிறது. சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு இரண்டரை வருடங்கள் ஆகும். 2022 ஆம் ஆண்டு சனியின் பெயர்ச்சி ராசியில் நடக்க உல்ல நிலையில் தற்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சி நடக்க உள்ளது.

சனி நட்சத்திரப் பெயர்ச்சி 2022 
பஞ்சாங்கத்தின்படி, சனி தற்போது திருவோணம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2021 ஜனவரி 22 அன்று திருவோணம் நட்சத்திரத்தில் சனி பகவானின் பெயர்ச்சி நடைபெற்றது. சனி பகவான் 2022 பிப்ரவரி 18 வரை திருவோணம் நட்சத்திரத்தில் இருப்பார். அதன்பின் சனி அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். மேலும் அடுத்த ஆண்டு அதாவது 15 மார்ச் 2023 வரை இந்த நிழ்வு ஏற்படும்.

மேலும் படிக்க | Admirable Zodiac: கவர்ச்சியான ராசிகள்! எதிரில் இருப்பவர்களை வசீகரிக்கும் ராசி உங்களுடையதா? 

அவிட்ட நட்சத்திரம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அவிட்டம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 23வது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது அவிட்ட நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் அவிட்ட நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும்.

சனி பெயர்ச்சி 2022
பஞ்சாங்கத்தின் படி, ஏப்ரல் 29, 2022 அன்று, சனி ராசியை மாற்றுவார். இந்த நாளில், சனி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். ஜோதிட சாஸ்திரப்படி கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். சனி அசுபமாக இருக்கும்போது, ​​சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதனுடன், ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் போது கவனமாக இருக்க வேண்டும். இதற்கு பரிகாரமாக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடுவதன் மூலம் சனிபகவான் மகிழ்ச்சி அடைகிறார்.

சனி நட்சத்திர பெயர்ச்சி 2022 யாருக்கு சாதகம்
மேஷம்: நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முழுமைக்கு வரும். நேரம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு, வருமானம் அதிகரிக்கும். சொத்து வாங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற காலம். வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். எங்கிருந்தோ திடீர் பண ஆதாயம் உண்டாகும். 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பணவரவு உண்டாகும். லாபகரமான மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் தேவை. 

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு திருமணம் கை கூடி வரும். தொழிலில் லாபம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றி கொடி ஏற்றும் நேரம் இது. பணம் சம்பாதிப்பதற்கான முயற்சிகள் விரைவில் பலனளிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இனிமையாக பேசி மற்றவர்களை வசீகரிப்பதில் வல்ல ‘3’ ராசிக்காரர்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News