வருமான வரி தாக்கல் செய்வதற்காக புதிய இணையதளம் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தனிநபர் வருமான வரி கணக்குகள், வணிகம் தொடர்பான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதை மேலும் எளிதாக்கும் நோக்கில் புதிய இணையதளத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.
ரீபண்ட் விரைவில் கிடைக்க செய்தல், வருமான வரி (Income Tax) கணக்கு தொடர்பான மேல்முறையீடு, அபராதம், வரி மதிப்பீடு போன்றவை தொடர்பாக, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பரிசீலனை செய்ய ஏதுவாக, நவீன முறையில் புதிய இணையதளம் (New Website) வடிவமைக்கப்பட்டது. ஆனால் அதில், தொடர்ந்து தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிலும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி முதல் இயங்கவில்லை.
ALSO READ | Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்கையில் ஏற்படும் பொதுவான தவறுகள்..!!
வருமான வரியை தாக்கல் செய்தவற்கான புதிய போர்டலில், இன்றும் குறைபாடுகளை தீர்க்காதது குறித்து விளக்கமளிக்க வேண்டும் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
ALSO READ | இந்த ‘1’ ரூபாய் காயின் இருந்தால், ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம்..!!
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2020-21 நிதியாண்டிற்கான (AY 2021-22) வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்புள்ளது என்று வரி வல்லுநர்கள் கூறியுள்ளனர். 21 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் (ITR) செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30. புதிய வருமான வரி இணையதளமான www.incometax.gov.in பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாக, பல்வேறு பயனர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற காரணங்களால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ALSO READ | Finance Ministry: என்று முடிவுக்கு வரும் வருமான வரித்துறை இணையதளக் கோளாறு Infosys?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR