Danger! வீட்டைச் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களால் ஆபத்து!

ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பரிந்துரைக்கப்படும் சில வித்தியாசமான பொருட்களை பயன்படுத்துவதும் இயல்பாகிவிட்டது.  ஆனால், ரசாயனங்களைக் கலந்து வீட்டை சுத்தம் செய்வது மிகப் பெரிய ஆபத்து என்பது தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 9, 2021, 12:40 PM IST
  • வீட்டைச் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களால் ஆபத்து!
  • ப்ளீச்சிங் பவுடருடன் மற்ற பொருள்களை கலந்தால் ஆபத்தான ரசாயனங்கள் உருவாகலாம்
  • பிளீச்சுடன் எலுமிச்சை சாறு போன்ற அமிலம் உள்ள எதையும் கலக்கக்கூடாது
Danger! வீட்டைச் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களால் ஆபத்து!   title=

வீட்டை சுத்தமாக வைத்திருப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சுத்தமாக வைத்திருப்பதற்கும், அழகாக வைத்திருப்பதற்கும் சிறிய வேறுபாடு தான் உண்டு. சுத்தம் சுகாதாரத்தைத் தரும். அதற்காக அதிக செலவு செய்யத் தேவையில்லை. ஆனால் தற்போதைய கிருமித்தொற்றுச் சூழலில், வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதற்காக பலரும் அதிக செலவு செய்யலாம்.

ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பரிந்துரைக்கப்படும் சில வித்தியாசமான பொருட்களை பயன்படுத்துவதும் இயல்பாகிவிட்டது.  ஆனால், ரசாயனங்களைக் கலந்து வீட்டை சுத்தம் செய்வது மிகப் பெரிய ஆபத்து என்பது தெரியுமா?

ப்ளீச்சிங் பவுடர் (bleaching powder) மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால், அதை மற்ற பொருள்களுடன் கலக்கும்போது பல ஆபத்தான ரசாயனங்கள் உருவாகலாம் என்பது தெரியாமல் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம்.

Also Read | Elephant family: 500 கி.மீ வீதியுலா வரும் சீனாவின் யானை மந்தைகள் Viral

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு ஏற்படுத்தலாம். எனவே, சுத்தம் செய்யும்போது, எதை, எதில் கலக்கக்கூடாது என்று தெரிந்துக் கொள்வோம்… 

பிளீச்சுடன் எலுமிச்சை சாறு போன்ற அமிலம் உள்ள எதையும் கலக்கக்கூடாது. ஏனெனில் பிளீச்சுடன் அமிலப் பொருள்களைக் கலக்கும்போது, அதிலிருந்து வரக்கூடிய வாயு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

அதேபோல, பிளீச்சுடன் கிருமி நீக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் கலவை, மயக்கம் ஏற்படுத்தக்கூடிய chloroform உருவாகிறது. அதனால், உடல் உறுப்புகள் பாதிப்படையலாம்.

Also Read | புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வெங்காயத்தாளின் நன்மைகள்

வீட்டைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் அம்மோனியா (ammonia)வை பிளீச்சுடன் சேர்த்து பயன்படுத்தக்கூடாது. இந்தக் கலவையை பயன்படுத்துபவர்களின், கண், சுவாசக்குழாய் மற்றும் தோலில் எரிச்சல் ஏற்படலாம். இது சிறிய பாதிப்பு தான். ஆனால், கல்லீரல், சிறுநீரகம், நரம்புகள் ஆகியவை பாதிப்படையும் வாய்ப்பு இருப்பது தெரியுமா? எனவே இந்தக் கவலவை தவிர்ப்பது நல்லது.
 
பூசனம் அகற்றும் திரவங்களில் அமிலம் இருக்கும், எனவே பிளீச்சுடன் அமிலம் கலந்து பயன்படுத்துவது சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஏனெனில், இந்தக் கலவை குளோரின் (chlorine) வாயுவை உருவாக்குகிறது.   

Also Read | Ayurvedic Agni Tea: அக்னி தேநீர் இருக்கும்போது வேறு டீ எதற்கு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News