கிரெடிட் கார்டு vs டெபிட் கார்டு எது பெஸ்ட்: தற்போது கிரெடிட் கார்டு மீது இளைஞர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான மோகம் காணப்படுகிறது. வங்கிகள் முதல் பெட்ரோல் பம்புகள் வரை, எல்லா இடங்களிலும் கிரெடிட் கார்டு முகவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அதன் பலன்களை எண்ணுவதில் மும்முரமாக உள்ளனர். மேலும் தகவல் இல்லாததால் சாமானியர் கிரெடிட் கார்டு பெறும் வலையில் விழுகிறார்கள். ஆனால் சிறிது காலங்கள் கழித்தே ஒரு மிகப்பெரிய தவறை செய்து விட்டோம் என்று எண்ணுவோம். எனவே இன்று நாம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு என்ன வித்தியாசம் என்று பார்போம். எந்த அட்டை வாடிக்கையாளருக்கு லாபகரமான ஒப்பந்தமாக இருக்கும்?
டெபிட் கார்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
முதலில் டெபிட் கார்டு பற்றி பேசுகையில், உங்கள் கணக்கில் பணம் வந்த பிறகுதான் அந்த தொகை டெபிட் செய்யப்படும். டெபிட் கார்டுகள் வழக்கமாக வங்கிக் கணக்கைத் திறக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு, வருடத்திற்கு பெயரளவு கட்டணம் வசூலிக்கப்படும். இது ரூ 100 அல்லது 150 வரை இருக்கலாம். இது தவிர எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆன்லைன் ஷாப்பிங் முதல் ஏடிஎம் வரை டெபிட் கார்டுகள் தடையின்றி செயல்படும்.
மேலும் படிக்க | தீபாவளி முன்னிட்டு ரயில்வே பயணிகளுக்கு முக்கிய செய்தி, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
கிரெடிட் கார்டுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
கிரெடிட் கார்டு பற்றி பேசுகையில், இதற்கு உங்கள் கணக்கில் பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு நிலையான தொகை வங்கியால் உங்களுக்கு வழங்கப்படும், இந்தத் தொகை உங்கள் CIBIL மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டது. CIBIL ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணாகும். இதில் அதிக மதிப்பெண் பெறுவது சிறந்தது. பொதுவாக, இந்தியாவில் 750 க்கு மேல் மதிப்பெண் இருந்தால், கடன் அனுமதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இந்த மதிப்பெண்ணைக் கொண்ட அறிக்கை CIBIL அறிக்கை என்று அழைக்கப்படுகிறது.
CIBIL அறிக்கையானது, ஒரு நபரின் கடன் வரலாற்றை, அந்த நபர் எப்போதாவது அவரது முந்தைய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையா என்பது உட்பட, வங்கி பார்த்து கொள்ள அனுமதிக்கிறது. அந்த நபர் இதுவரை எத்தனை கடன்களை எடுத்துள்ளார் என்பது முதல் முந்தைய கிரெடிட்களின் தொகை மற்றும் கால அளவு உட்பட வரலாற்றை அனைத்து வங்கிகளுக்கு காண்பிக்கிறது. இது வங்கிகள் கடன்தொகையின் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது மற்றும் அதனால் இழப்புகளைக் குறைக்கிறது. அதிக CIBIL மதிப்பெண் பெற்றவருக்கு அதிக கடன் வரம்பு உள்ளது. ஆனால் எந்த வங்கியும் இலவச கடன் தருவதில்லை. டெபிட் கார்டுகளை விட 1 வருடத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
யாருக்கு எந்த அட்டை பெஸ்ட்?
எந்த வாடிக்கையாளருக்கு எந்த அட்டை சிறந்தது என்பது இப்போது வருகிறது. நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் அதிக செலவு செய்யமாட்டீர்கள், ஆனால் ஏடிஎம்யின் பயன்பாடு அதிகம் செய்கிறீர்கள் என்றால், கிரெடிட் கார்டுக்குப் பதிலாக டெபிட் கார்டைப் பயன்படுத்துவது உங்களுக்கு நன்மை பயக்கும்.
அதே நேரத்தில், நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்தால். ஒரு மாதத்தில் அதிக ஷாப்பிங் செய்பவராக இருந்தால், கிரெடிட் கார்டுக்கு பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் நீங்கள் பல்வேறு ஷாப்பிங் சலுகைகளைப் பெறலாம். ஆனால் கிரெடிட் கார்டின் உபயோகம் அதிகம் இல்லையெனில், ஒவ்வொரு வருடமும் அதன் கட்டணத்தைச் செலுத்துபவதற்கு பதிலாக, உடனடியாக டெபிட் கார்டுக்கு மாறுவது நல்லது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்காக வந்தாச்சி செம டூர் பேக்கேஜ்.. ரயில்வே ஜாக்பாட் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ