இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டின் புகழ்பெற்ற டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு UG அல்லது PG படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் மாணவர்கள் சேர்க்கை பெற வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்கள் மத்தியில் உள்ளது. பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் சில சிறந்த முதுகலை படிப்புகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் வாழ்க்கையில் பொருளாதார நிலையில் பெரிதும் முன்னேறி சாதனை படைக்கலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்த சம்பளத்துடன் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
பிரெஞ்சு மொழியில் முதுகலை பட்டம் (MA in French)
வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்வது எப்போதும் சிறந்த வேலை வாய்ப்புகளை கொடுக்கும். மொழியைத் தவிர, இந்த பாடநெறியில் மாணவர்களுக்கு அதன் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு பற்றியும் கற்பிக்கப்படுகிறது. படிப்பை முடித்த பிறகு, மாணவர்கள் மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு ஆசிரியர் பணியில் சேரலாம். இதற்கு லட்சங்களில் சம்பளம் கிடைக்கும். அதோடு சர்வதேச நிறுவனங்களில் சிறந்த வேலை வாய்ப்புகளைப் (Job Opportunities) பெறலாம். இப்போது பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளும் கற்பிக்கப்படுகிறது என்பதால், இந்த வெளிநாட்டு மொழி படிப்பவர்களுக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது.
ஜெர்மன் மொழியில் முதுகலை பட்டம் (MA in German)
ஜெர்மன் மொழி முதுலகலை பட்டம் ஜெர்மன் இலக்கியத்தின் படிப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த பாடத்திட்டத்தின் மூலம், மாணவர்கள் ஜெர்மன் மொழி மற்றும் அதன் வரலாற்றில் தேர்ச்சி பெற முடியும். இந்தப் படிப்பை முடித்த பிறகு, பன்னாட்டு நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளராகவும், ஜெர்மன் மொழி ஆசிரியர்களாகவும் வேலை பெறலாம்.
ஸ்பானிஷ் படிப்பில் முதுகலை பட்டம் (MA in Spanish Studies)
ஸ்பானிஷ் மொழிக்கான முதுகலை படிப்பு ஸ்பானிஷ் மொழி மற்றும் அதன் இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்து கற்பிக்கப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தின் மூலம், ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளின் மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய தகவல்களை மாணவர்கள் பெறலாம்.இந்தப் படிப்பை முடித்த பிறகு, பன்னாட்டு நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளராகவும், ஸ்பானிஷ் மொழி ஆசிரியர்களாகவும் வேலை பெறலாம்.
மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (MBA)
பல தொழில் துறைகளுக்கு எம்பிஏ பின்னணி கொண்ட விண்ணப்பதாரர்கள் தேவைப்படுகிறடு. இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது மனிதவள, வணிகம், நிதி மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் பதவிகளுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. இந்தப் படிப்பை முடித்த பிறகு, வணிக ஆலோசகர், நிதி ஆய்வாளர், சந்தைப்படுத்தல் மேலாளர் மற்றும் செயல்பாட்டு மேலாளர் போன்ற பதவிகளுக்கான நல்ல சம்பள பேக்கேஜ்களை பெறலாம்.
மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (MCA)
இந்த பாடநெறி கணினி பயன்பாடுகள் மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் நிபுணத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் நிரலாக்கம், வலை உருவாக்கம், மென்பொருள் பொறியியல் மற்றும் தரவுத்தள மேலாண்மை போன்ற பாடங்களில் பயிற்சி பெறலாம். இந்த பட்டப்படிப்புக்குப் பிறகு, மாணவர்கள் மென்பொருள் உருவாக்குநர்கள், கணினி ஆய்வாளர்கள், தரவுத்தள நிர்வாகிகள் மற்றும் ஐடி ஆலோசகர்கள் பதவிகளில் வேலை பெறலாம்.
மேலும் படிக்க | FATF: சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பாராட்டு! பணமோசடியை தடுப்பதில் நம்பர் ஒன் நாடு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ