சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கிறது!

சிறு சேமிப்புத் திட்டங்கள் (Small Savings Schemes) என்பது நடுத்தர மக்கள் மத்தியில் சேமிக்கு பழக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் சில திட்டங்கள் ஆகும். சிறு சேமிப்புத் திட்டங்களில் சேமிப்பு வைப்புத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாத வருமானத் திட்டம் என மூன்று பிரிவுகள் உள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 15, 2023, 01:38 PM IST
  • சிறு சேமிப்புத் திட்ட வட்டி விகிதங்களில் மாற்றம்.
  • 2020 முதல் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை.
  • பொது வருங்கால வைப்பு நிதியில் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீடு.
சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கிறது! title=

சிறு சேமிப்புத் திட்டங்கள் (Small Savings Schemes) என்பது நடுத்தர மக்கள் மத்தியில் சேமிக்கு பழக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் சில திட்டங்கள் ஆகும். சிறு சேமிப்புத் திட்டங்களில் சேமிப்பு வைப்புத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மாத வருமானத் திட்டம் என மூன்று பிரிவுகள் உள்ளன. நடுத்தர மற்றும் எளிய வகுப்பு மக்களுக்கு எதிர்கால பாதுகாப்பு என்பது அவர்களது சேமிப்பு தான் என்றால் மிகையில்லை. இதை நம்பி அவர்கள் பல்வேறு அரசு சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.  சிறு சேமிப்பு வைப்புகளில் 1 முதல் 3 வருட காலத்திற்கான வைப்பு மற்றும் 5 வருடங்களுக்கான தொடர் வைப்புகள் உள்ளன. தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் (KVP) போன்ற சேமிப்புச் சான்றிதழ்களும் இதில் அடங்கும். சமூக பாதுகாப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவை அடங்கும்.

சிறு சேமிப்புத் திட்ட வட்டி விகிதங்கள்

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம், பிபிஎஃப், கிசான் விகாஸ் பத்திரம் அல்லது தேசிய சேமிப்புச் சான்றிதழ் போன்ற அரசாங்கத்தால் நடத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களிலும் நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இது உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். ஆம், சிறுசேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் விரைவில் நல்ல செய்தி ஒன்றை வழங்கலாம்.  பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம்.

வட்டி விகிதம் உயர்த்தப்படுவது குறித்த அறிவிப்பு

செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தலாம். சிறு சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சூழ்நிலையில், அரசாங்கத்தின் இந்த மதிப்பாய்வை ஜூன் மாதத்திற்குப் பிறகு செப்டம்பர் கடைசி நாள் வரை செய்யலாம். முன்னதாக, ஜூன் 30 அன்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில், சில சிறு சேமிப்புத் திட்டங்களின் (SSY) வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்தியது.

2020 முதல் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

உங்கள் தகவலுக்கு, ஏப்ரல் 2020 முதல் சிறு சேமிப்புத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி  வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. இது போன்ற சூழ்நிலையில், வரவிருக்கும் ஆய்வுக் கூட்டத்தின் போது அரசாங்கம் PF வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களும் முன்னதாகவே அதிகரித்துள்ளது. ஆனால், ஏப்ரல் 2020 முதல் PPF இன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.

மேலும் படிக்க | போஸ்ட் ஆபீஸ் ஜாக்பாட் திட்டம், பணம் இரட்டிப்பாகும்.. உடனே படியுங்கள்

பொது வருங்கால வைப்பு நிதியில் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்

இந்தியாவில் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் பொது வருங்கால வைப்பு நிதி என்னும் PPF திட்டத்தில்  முதலீடு செய்கிறார்கள். PPF நிதி திட்டத்தின்  முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, அதன் வட்டி விகிதங்களை மாற்றாமல் அரசாங்கம் அதனை நிலையான வட்டி விகிதமாக வைத்திருக்கிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக அதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது PPF மீதான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது.

மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு அடிச்சுது லாட்டரி: வருகிறது வட்டி பணம்.. செக் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News