Budget 2023: மாத சம்பளம் பெரும் நபரா நீங்கள்? பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு, விவரம் இதோ

Union Budget 2023: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2023-ஐ தாக்கல் செய்யும்போது, சம்பளவர்க்கத்தினர், வரிக் குறைப்பு மற்றும் ஸ்லாப் விகிதங்களில் சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2023, 06:26 PM IST
  • சம்பளம் பெறும் ஊழியர்கள், வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) கணக்கிடுவதற்கு மெட்ரோ நகரங்களின் வரையறையில் திருத்தம் தேவை என கருதுகிறார்கள்.
  • தற்போது டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நான்கு நகரங்கள் மட்டுமே மெட்ரோ நகரங்களின் பிரிவின் கீழ் வருகின்றன.
  • மேலும் இந்த நகரங்களில் உள்ள ஊழியர்கள் HRA விலக்கு மூலம் பலன்களைப் பெறுகின்றனர்.
Budget 2023: மாத சம்பளம் பெரும் நபரா நீங்கள்? பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு, விவரம் இதோ title=

வருமான வரி: நாட்டில் இன்னும் சில நாட்களில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டுக்கு முன் மக்களுக்கு அரசிடமிருந்து சில எதிர்பார்ப்புகள் உள்ளன. மறுபுறம், இது மோடி அரசின் இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இந்த முறை பட்ஜெட் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில், சம்பளம் பெறும் ஊழியர்கள் நாட்டிலேயே அதிக வரி செலுத்தும் வர்க்கமாக உள்ளனர். இவ்வாறான நிலையில், தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், இவர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைப்பது இவர்களது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2023-ஐ தாக்கல் செய்யும்போது, சம்பளவர்க்கத்தினர், வரிக் குறைப்பு மற்றும் ஸ்லாப் விகிதங்களில் சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2023 மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் சில முக்கிய எதிர்பார்ப்புகள்: 

வரி அடுக்கில் திருத்தம்

தற்போது, ​​வரி செலுத்துவோர் வரிகளை தாக்கல் செய்யும் போது இரண்டு வரி விதிகளுக்கு இடையே தேர்வு செய்யலாம் என்ற முறை உள்ளது. இதன் மூலம் அவர்களின் வருமானம் ரூ. 2.5 லட்சம் வரை வரி விலக்கு பெறுகிறது. மேலும், ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி தள்ளுபடியும் கிடைக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், அடிப்படை வரி விலக்கை ரூ.2.5 லட்சத்தில் இருந்து, குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாக அரசு உயர்த்தும் என, அதிக வரி செலுத்துவோர் குழுவில் உள்ள, சம்பளம் பெறும் ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மேலும் படிக்க | Budget 2023: PLI திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம்

எச்ஆர்ஏ

சம்பளம் பெறும் ஊழியர்கள், வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) கணக்கிடுவதற்கு மெட்ரோ நகரங்களின் வரையறையில் திருத்தம் தேவை என கருதுகிறார்கள். தற்போது டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நான்கு நகரங்கள் மட்டுமே மெட்ரோ நகரங்களின் பிரிவின் கீழ் வருகின்றன. மேலும் இந்த நகரங்களில் உள்ள ஊழியர்கள் HRA விலக்கு மூலம் பலன்களைப் பெறுகின்றனர். 

இருப்பினும், பெங்களூரு போன்ற பிற நகரங்களிலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படுகின்றது. மேலும் இங்கு ஐடி மற்றும் ஐடி இயக்கப்பட்ட துறைகளில் சுமார் 1.5 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆகையால், எச்ஆர்ஏ குறித்த கோரிக்கை இந்த நகரங்களில் அதிகரித்துள்ளது. 

வீடு வாங்குபவர்களுக்கு வரி விலக்கு

வீடு வாங்கும் கனவில் உள்ள சம்பள வர்க்கத்தினர், மத்திய பட்ஜெட் 2023ல் இருந்து, மலிவு விலை வீடுகளை அதிகரிக்க, அரசாங்கத்திடம் இருந்து கூடுதல் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். தற்போது, ​​வருமான வரிச் சட்டத்தின் 24பி பிரிவு, வீடு வாங்குபவர்கள் வீட்டுக் கடனுக்கான வருடாந்திர வட்டிக்கு ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு கோர அனுமதிக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த வரம்பை ரூ.5 லட்சமாக அரசு உயர்த்தும் என வரி செலுத்துவோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இது தவிர, வீடு வாங்குபவர்கள் பிரிவு 80C இன் கீழ் வீட்டுக் கடனில் செலுத்தப்பட்ட அசல் தொகைக்கு ரூ. 1.5 லட்சம் வரை பிடித்தம் செய்யலாம், இந்த வரம்பு ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் கடன் தள்ளுபடி

கல்விக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் நாட்டின் கடன் சந்தையில் 35 சதவீதத்தைக் கொண்டுள்ளன. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80E -ல் கல்விக் கடனில் மட்டும் வட்டிக் கழிப்பிற்கான வரம்பு வழங்கப்படுகின்றது. ஆனால், தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு எந்த விலக்கும் அளிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு தனிநபர் கடன் வாங்கும் மாத சம்பளதாரர்களும் சில தளர்வுகளை எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் படிக்க | Budget 2023: வரி செலுத்துவோருக்கு பெரிய நிவாரணம், வருகிறது வரிமுறையில் மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News