பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000க்கும் குறைவான விலையில் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் 160 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டத்தைக் வழங்குகிறது. இந்த ப்ரீபெய்டு திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இலவச அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையையும் கிடைக்கிறது. இதுதவிர இந்த திட்டத்தில் கூடுதலாக இரண்டு மாதங்களுக்கு இலவச பிஆர்பிடி சேவை சேவை, இலவச லோக்துன் சேவையையும் வழங்குகிறது. இந்த விலை மலிவான திட்டம் உங்களுக்கு ரூ.997க்கு கிடைக்கிறது.
எந்தவொரு ப்ரீபெய்டு திட்டமும் இவ்வளவு கம்மியான விலையில் இத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கவில்லை, ஆனால் பிஎஸ்என்எல் நெட்வொர்க் ரூ.997 விலையில் 160 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் இரண்டு முறை ரீசார்ஜ் செய்தால், மொத்த வேலிடிட்டி 320 நாட்களுக்கு கிடைக்கும், இது முழு வருடத்தை விட 45 நாட்கள் குறைவாகும். ரூ.2000க்கும் குறைவான விலையில் ஒரு வருடத்திற்கு இந்த திட்டத்தின் பலன்களை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இன்னும் 18 முதல் 24 மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனது தனது 4ஜி சேவையை அறிமுகப்படுத்திவிடும், இதனால் வாடிக்கையாளர்கள் பல நன்மைகளை பெறுவார்கள்.
மேலும் படிக்க | ரூ 139 ரீசார்ஜ் பிளான்..டெய்லி 2ஜிபி டேட்டா..அசரவைக்கும் பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் கேமிங் நன்மைகள் மற்றும் ஓடிடி (ஓவர்-தி-டாப்) சந்தாக்கள் கூடுதல் பலன்களை பெறுவார்கள். 2024-ம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜிக்கு மேம்படுத்தப்படும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பிஎஸ்என்எல் ஸ்கிப்பருக்கு 4ஜி மொபைல் டவர்களை நிறுவுவதற்கு ஒரு பெரிய திட்டத்தை வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட் மூலம் நிதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் BSNL இன் ரூ.1499 திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தை நீங்கள் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் விலை பற்றி பேசினால், அடிப்படையில் ஒரு நாளைக்கு நீங்கள் 4 ரூபாய் 1 பைசா செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த மலிவான திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியை பெறுவீர்கள். இதில் உள்ள சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்தில், இணையத்தைப் பயன்படுத்த மொத்தம் 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது. உங்கள் தேவைக்கேற்ப இந்தத் தரவை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: பிஎஸ்என்எல் ரூ. 269 ரீசார்ஜ் பிளான்: தினமும் 2ஜிபி தரவு, எக்கச்சக்க நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ