மாணவர்கள் செய்யும் குறும்புகளும், பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக அவர்கள் சொல்லும் பொய்களும் பிரசித்தமானவை என்றாலும் சமூக ஊடகங்களில் வைரலாகும் அளவு ஒரு மாணவர் செய்த விஷயம் ஆச்சரியமானது.
அதைவிட வியப்பான விஷயம் என்னவென்றால், மாணவரின் விண்ணபப்த்தை பரிசீலித்து அவருக்கு விடுப்பும் அளித்த தலைமையாசிரியரின் தாராள மனப்பான்மையே என்று சொல்லி லீவ் லெட்டரை சமூக ஊடகத்தில் வைரலாக்குகிறார்கள் நெட்டிசன்கள்.
அப்படி என்ன காரணம் சொல்லி லீவ் எடுத்த? எங்களுக்கும் தெரிஞ்சுக்கனும் என்று கேட்பவர்கள், தயவு செய்து இந்த டெக்னிக்கை பின்பற்ற வேண்டாம்.
மேலும் படிக்க | கோடை வெயிலை கூலாக்கி சூரியனுக்கே சேலஞ்ச் விடும் T-Shirt AC
பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை. விடுப்பு எடுக்க வேண்டும், என்ன காரணம் சொல்வது என்று யோசித்த மாணவர் விண்ணப்பத்தில் எழுதிய காரணம் இதுவரை யாரும் எழுதாதது என்றால், அதைப் பார்த்துவிட்டு தலைமையாசிரியர் விடுப்பு கொடுத்தது அதைவிட விசித்திரமானது.
நான் இறந்துவிட்டேன், அரை நாள் விடுப்பு வேண்டும் என்பதுதான் மாணவர் சொன்ன காரணம். அதை ஏற்றுக் கொண்ட ஆசிரியரும் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு கையொப்பமும் போட்டுவிட்டார். இந்த லீவ் லெட்டர் தான் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
அதிலும் 2019இல் நடந்த இந்த சம்பவம் இப்போது வைரலாவதற்கு காரணம் என்ன என்று யோசித்தால், கொரோனா வைரஸே (Coronavirus) மிகப்பெரிய வைரலாக இருந்ததால், இந்த கடிதம் அப்போது பெரிய கவனத்தைப் பெறவில்லை.
மேலும் படிக்க | மின்சாரம் இல்லாதபோது ஏசியை பயன்படுத்துவது எப்படி?
விண்ணப்பத்தில் மாணவர் எழுதியது- 'நான் இறந்துவிட்டேன், அரை நாள் விடுப்பு வேண்டும்': தலைமையாசிரியரும் கொடுத்தார்
அரை நாள் விடுப்புக்காக பள்ளி மாணவர் எழுதிய விண்ணப்பம்
யாரும் நம்பாத ஒரு சாக்குப்போக்கையும் நம்பி ஒரு தலைமை ஆசிரியர் விடுப்பு கொடுத்திருக்கிறார் என்றால் என்ன சொல்வது?
இந்த தலைமையாசிரியர் உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளியின் பிரின்சிபல்.
மேலும் படிக்க | ஏசியில் கூலிங் சரியா வரலையா? இத செய்ங்க
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவரின் விண்ணப்பம்
'விண்ணப்பதாரர் இன்று 20 ஆகஸ்ட் 2019 அன்று 10 மணியளவில் காலமானார் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, விண்ணப்பதாரருக்கு தயவுகூர்ந்து அரைநேர விடுப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தனக்கு தானே மாணவன் எழுதிய கடிதம் என்றாலும், இது எழுத்துப்பிழை அல்லது மொழியில் போதமையால் நிகழ்ந்த தவறு என்றும் சொல்லலாம்.
விண்ணப்பத்தில் சிவப்பு பேனாவால் கையெழுத்து போட்டு விடுப்பு அளித்துள்ளார். ஆனால் இந்த விண்ணப்பம் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சென்றவுடன், அது விவாதப்பொருளாக மாறியது.
பள்ளி நிர்வாகத்திடமும், சம்பந்தபப்ட்ட கல்வித்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த மூன்று வருட பதிவு சமூக ஊடகங்களால் அதிகம் பகிரப்பட்டு ட்ரோல் ஆகி வருகிறது.
மேலும் படிக்க | படுக்கையில் மனைவி செய்த வேலை, கடுப்பான கணவன்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR