Aadhaar Card Latest Update: ஆதார் அட்டையைப் பயன்படுத்துபவர்களுக்கு UIDAI ஒரு முக்கிய தகவலை அளித்துள்ளது. உங்கள் ஆதார் அட்டை தொலஒந்து விட்டர்தே என்ற கவலை வேண்டாம். இப்போது ஆதார் அட்டையை மீண்டும் பெறுவதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
UIDAI இப்போது ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதை மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தத் தகவலைக் கொடுத்துள்ளது. நீங்கள். ஒரே ஒரு கிளிக்கில் ஆதார் அட்டையை எங்கு வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்ய முடியும் என கூறி, அதற்கான நேரடி இணைப்பையும் பகிர்ந்துள்ளது.
ஆதார் தற்போது நமது தனிப்பட்ட அடையாளத்திற்கான மிக முக்கியமான ஆவணம். வங்கி வேலை அல்லது அரசுத் திட்டம் என எதுவானாலும், அதன் பயனை பெற ஆதார் தேவை. ஆன்லைனில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி இணைப்பைப் பகிர்ந்த UIDAI, 'https://eaadhaar.uidai.gov.in என்ற இணைப்பில் இருந்து எந்த நேரத்திலும் உங்கள் ஆதார் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
ALSO READ | Masked Aadhaar Card: உங்கள் தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க நொடியில் பெறும் வழிமுறை..!!!
பதிவிறக்கம் செய்யும் முறை
ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய, UIDAI - eaadhaar.uidai.gov.in/ வழங்கிய நேரடி இணைபில் உள்நுழைய வேண்டும். அதன் பிறகு OTP மூலம் உள்நுழைக. அதன்பிறகு சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆதார் தரவிறக்கம் செய்யவும்.
1. கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆதார் பதிவிறக்கவும்
2. UIDAI நேரடி இணைப்பு eaadhaar.uidai.gov.in/ இல் உள்நுழைக.
3. உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
4. நீங்கள் Masked ஆதார் அட்டை வைத்திருக்க விரும்பினால், 'Masked Aadhaar' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்
5. பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சாவை உள்ளிடவும்.
ALSO READ | வங்கி லாக்கர் புதிய விதிகள்; 'இந்த' காரணத்திற்காக லாக்கரை வங்கிகள் உடைக்கலாம்..!!
6. 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
7. உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP உங்களுக்கு அனுப்பப்படும்.
8. OTP ஐ உள்ளிடவும்.
9. OTP சமர்ப்பித்த பிறகு, உங்கள் ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் ஆதார் பதிவிறக்க ஆப்ஷன், உங்கள் கணினி மானிட்டர் அல்லது செல்லில் காட்டப்படும்.
10. பதிவிறக்க விருப்பத்தை கிளிக் செய்து எதிர்கால குறிப்புக்காக சேமிக்கவும். தேவைப்பட்டால் பிரிண்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
ALSO READ | ரயில் பயணிகளுக்கு டிக்கெட் உடன் கிடைக்கும் முக்கிய வசதிகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR