பழைய ஓய்வூதியத் திட்டம் சமீபத்திய செய்திகள்: பல காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது. சமீபத்தில் இமாச்சல பிரதேச அரசும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இமாச்சல பிரதேச ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய பலன் கிடைக்கும். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய ஊழியர்களும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
என்பிஎஸ் இன் கீழ் சேகரிக்கப்பட்ட நிதி திரும்ப அளிக்கப்படாது
இந்த விவகாரம் மீதான விவாதத்தின் போது, மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பகவத் கராட் பதில் அளித்தார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த வகையிலும் மீட்டெடுக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று அவர் தனது பதிலில் தெளிவுபடுத்தினார். பழைய ஓய்வூதியத்தை திரும்பப் பெற விரும்பும் மாநில அரசுகள் என்பிஎஸ்-ன் கீழ் வசூலிக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக PFRDA சட்டத்தில் எந்த விதியும் இல்லை.
என்பிஎஸ் நிதி
மோடி அரசு சார்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) மீட்டெடுத்த பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், என்பிஎஸ்ஸில் சேர்ந்துள்ள நிதியைத் திரும்பக் கோருவதாகக் கூறப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டமான என்பிஎஸ் -இல் உள்ள நிதியை திரும்ப அளிப்பதற்கு பிஎஃப்ஆர்டிஏ சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு இரட்டை நற்செய்தி: டிஏ ஹைக்குடன் இதுவும் கிடைக்கும்
ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவதற்காக எடுத்த முடிவு குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த மாநில அரசுகள் என்பிஎஸ்-ன் கீழ் வசூலிக்கப்பட்ட தொகையைத் திரும்பக் கோரியுள்ளன.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம், 2013 இன் கீழ், சந்தாதாரர்களின் திரட்டப்பட்ட நிதியைத் திரும்ப அளிக்கும் வசதி இல்லை என்று காரட் கூறினார். ஜனவரி 1, 2004க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில், ஓபிஎஸ்ஸை மீட்டெடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று கராட் தெரிவித்தார். ஜனவரி 1, 2004 முதல் அரசுப் பணியில் (ஆயுதப் படைகளைத் தவிர) புதிதாக ஆட்சேர்ப்பு நடந்தவர்களுக்கு இது கட்டாயமாக்கப்பட்டது.
மேலும் படிக்க | Old Pension குறித்து மிகப்பெரிய ஜாக்பாட் அப்டேட், உடனடியாக இதை படியுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ