CNG-PNG Price: பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. GAIL நிறுவனத்தின் துணை நிறுவனமான மஹாநகர் கேஸ் (MGL), மும்பை நகரில் CNG விலையை கிலோவிற்கு 8 ரூபாயையும், PNG நிலையான கன மீட்டர் அளவிற்கு விலையை 5 ரூபாயையும் குறைத்துள்ளது. மஹாநகர் கேஸ் தனது உரிமம் பெற்ற பகுதியில் இந்த விலைக் குறைப்பை செய்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் செய்வதற்கான புதிய முறையை அறிவித்ததையடுத்து எம்ஜிஎல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, சிஎன்ஜி மற்றும் குழாய் சமையல் எரிவாயுவின் புதிய விலையையும் அரசாங்கம் இன்று அறிவித்தது. எம்ஜிஎல் நிறுவனம் பிப்ரவரியில் சிஎன்ஜி விலையை கிலோவுக்கு ரூ.2.5 குறைத்தது. இருந்தபோதிலும், சிஎன்ஜியின் விலைகள் ஏப்ரல் 2022ஆம் ஆண்டை விட கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகமாக உள்ளது.
மேலும் படிக்க | திருத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விலை வழிகாட்டுதல்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடைவார்கள்
உள்நாட்டில் தயாரிக்கப்படும் எரிவாயு விலை குறைப்பின் பலனை சிஎன்ஜி-பிஎன்ஜி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக எம்ஜிஎல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த முடிவின்படி, மும்பை பெருநகரப் பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் சிஎன்ஜியின் விலை கிலோவுக்கு 8 ரூபாயும், பிஎன்ஜியின் விலை கன மீட்டருக்கு 5 ரூபாயும்ம் குறைக்கப்படுகிறது.
இப்போது இந்த விகிதம் இருக்கும்
நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் இந்த முடிவுக்குப் பிறகு, சிஎன்ஜி கிலோவுக்கு ரூ.79க்கும், பிஎன்ஜி கன மீட்டருக்கு ரூ.49க்கும் கிடைக்கும். ஏப்ரல் 1ஆம் தேதி முதல், ஏபிஎம் எரிவாயுவின் விலை இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் மாத சராசரியில் 10 சதவீதமாக இருக்கும். எவ்வாறாயினும், அத்தகைய விகிதம் ஒரு மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகுக்கு $6.5 ஆக இருக்கும்.
தற்போதைய எரிவாயு விலை mmBtu (One Million British Thermal Unit) ஒன்றுக்கு 8.57 அமெரிக்க டாலராக உள்ளது. தற்போதைய நடைமுறைக்கு பதிலாக ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்வதற்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். புதிய கிணறுகள் அல்லது ONGCm OIL துறைகளில் தலையீடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் எரிவாயு APM விலையை விட 20 சதவீதம் பிரீமியமாக அனுமதிக்கப்படும். இந்த நடவடிக்கையானது வீடுகளுக்கான குழாய் இயற்கை எரிவாயு (PNG) மற்றும் போக்குவரத்துக்கான சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ