7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி.. பண்டிகை காலத்தில் அரசின் பெரிய பரிசு

7th Pay Commission: ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் காத்திருக்கின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 8, 2023, 06:31 AM IST
  • அகவிலைப்படி 3 அல்லது 4 சதவீதம் அதிகரிக்கலாம்.
  • நவராத்திரிக்கு முன் பரிசு.
  • ஜூலை ஏஐபிசிஐ குறியீட்டில் முன்னேற்றம்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி.. பண்டிகை காலத்தில் அரசின் பெரிய பரிசு title=

7வது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: பண்டிகை காலம் துவங்கிவிட்டது. வரும் நாட்களில், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என பல பண்டிகைகள் வரவுள்ளன. இந்த பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பல பரிசுகளை தரவுள்ளது. செப்டம்பர் கடைசி வாரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்குப் பிறகு, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்தி மோடி அரசு அறிவிக்கலாம். செப்டம்பர் கடைசி வாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அகவிலைப்படி 3 அல்லது 4 சதவீதம் அதிகரிக்கலாம்

ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் காத்திருக்கின்றனர். மத்திய அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் அதிகரித்து 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்தலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மறுபுறம் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும் என மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர். அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும். மேலும் அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் அகவிலைப்படி உயர்வுடன் வழங்கப்படும். அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்துடன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவைத் தொகையையும் பெறலாம். மத்திய அரசின் இந்த முடிவால் 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவராத்திரிக்கு முன் பரிசு!

நவராத்திரியின் புனித திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. ஆகையால், மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை இம்மாதம் உயர்த்தக்கூடும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் அகவிலைப்படியை இருமுறை உயர்த்துகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகின்றது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட்.. 3 இல்ல 4% டிஏ ஹைக், சம்பளம் உயர்வு

சில்லறை பணவீக்க தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஜனவரி 2023 முதல் ஜூலை 2023 வரையிலான ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு 4 சதவிகிதம் இருக்கும் என்றே கருதப்படுகின்றது.

ஜூலை ஏஐபிசிஐ குறியீட்டில் முன்னேற்றம்

2023 ஜூலை மாத ஏஐசிபிஐ குறியீட்டின் எண்கள் நேற்று (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்டன. இந்த குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூலை, 2023க்கான அகில இந்திய ஏஐசிபிஐ CPI-IW 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 ஆக உள்ளது. இதுவே, ஜூன் குறியீட்டு எண் 136.4 புள்ளிகளாகவும் மே மாதத்தில் குறியீட்டு எண் 134.7 புள்ளிகளாகவும் இருந்தன.

ஜூன் மாதத்தில் மொத்தம் 1.7 புள்ளிகள் அதிகரித்த நிலையில், மே மாத புள்ளிவிவரங்களின்படி, மொத்த அகவிலைப்படி மதிப்பெண் 45.58 சதவீதமாக இருந்தது, இது ஜூன் 2023 இல் 46.24 சதவீதமாக அதிகரித்ததால் மத்திய ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரியவந்தது.

தற்போது 2023க்கான அகில இந்திய ஏஐசிபிஐ CPI-IW 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 ஆக உள்ள நிலையில், ஜனவரி முதல் மத்திஅ அரசு ஊழியர்களுக்கு 50 சதவிகித டிஏ அமலுக்கு வரும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்? ஊழியர்களின் ஊதியத்தில் 44% உயர்வு எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News