இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து நன்மை பயக்கிறதோ, அதே அளவிற்கு தீமைகளும் ஏற்படுகிறது. சமீப காலமாக ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது, வங்கியிலிருந்து அதிகாரிகள் பேசுவது போல பேசி ரகசிய இலக்கங்களை கேட்டறிந்து பணத்தை திருடி விடுகின்றனர். அதேபோல உங்கள் எண்ணுக்கு லட்சக்கணக்கில் பரிசு விழுந்துவிட்டது இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்று கூறி நமது போனை ஹேக் செய்து தகவல்களை திருடி விடுகின்றனர். இதுபோன்ற பல சம்பவங்கள் நாளுக்கு நாள் ஒவ்வொரு பகுதியிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சில நாட்களாக, பான் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றை கயவர்கள் தவறான வழியில் பயன்படுத்தும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.
மேலும் படிக்க | Old Pension Scheme: மத்திய அரசு அளித்த விளக்கத்தால் ஊழியர்களுக்கு அதிர்ச்சி
அதனால் பான் மற்றும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருப்பது அவசியமாகும். நம்முடைய பான் கார்டுகள் திருடப்பட்டு வங்கிகளில் மொபைல் மூலமாக கடன் வாங்கப்படுகிறது, இதில் அதிர்ச்சி என்னவென்றால் பான் கார்டு உரிமையாளர்களுக்கு தாங்கள் கடன் வாங்கியதே தெரியாது. யாரோ ஒருவர் தகவல்களை திருடி பணத்தை பெற்றுக்கொண்டு மற்றவர் கடனை செலுத்தும் நிலை ஏற்பட்டு விடுகிறது. நம் இந்தியாவில் இதுபோன்று பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை வைத்து மோசடி செய்யும் சம்பவம் தொடர்கதையாக ஒன்றாக மாறி வருகிறது. இந்த மோசடியிலிருந்து நம்மை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும், அவ்வாறு நாம் ஏமாறாமல் இருக்க சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதும். அதற்கான வழிகள் என்னென்ன என்பதை இங்கே காண்போம்.
எப்பொழுதும் தனி நபரது பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை குறித்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். இதை தவிர்த்து இன்னும் பிற உங்களின் முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல்களையும் பிறரிடம் பகிர்ந்துகொள்ள கூடாது. பான் கார்டு அல்லது ஆதார் அத்தடியை ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு செல்லும்போது, ஜெராக்ஸ் எடுத்தவுடன் உங்களது அசல் அட்டைகளை பத்திரமாக எடுத்துவைத்து விட்டோமா என்பதை சோதிக்க வேண்டும். கடைகளில் இந்த அட்டைகளை நீங்கள் மறந்து வைத்துவிட்டு வர நேரிடும்போது, அது கயவர்களின் கையில் அகப்பட்டு உங்களுக்கு தீய விளைவை ஏற்படுத்திவிடும்.
மேலும் உங்கள் சிபில் தொடர்பான டேட்டாக்களில் ஏதேனும் தவறான பதிவு இருந்தால், உடனடியாக உங்கள் வங்கி அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் தெரிவிக்க வேண்டும். அடுத்ததாக உங்கள் சிபில் ஸ்கோரை அடிக்கடி சரிபார்த்துக்கொள்வதும் அவசியமான ஒன்றாகும், இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் குறிப்பிட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவிக்க வேண்டும்.
மேலும் படிக்க | சம்பளம் பெறும் வகுப்பினருக்கு முக்கிய செய்தி, ஓய்வூதியம் இரட்டிப்பாகுமா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR