இளம் தம்பதிகளே... ‘இந்த’ ரொமேண்டிக்கான சுற்றுலா இடங்களை மிஸ் பண்ணாதீங்க..!!

திருமணம் முடித்த உடன் இளம் தம்பதிகள் செல்லக்கூடிய தேனிலவுப் பயணம் என்பது, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத  தருணமாக அமைய வேண்டும். சரியான இடங்களைத் தேர்வு செய்தால் மட்டுமே, இது சாத்தியமாகும் அந்தவகையில் இந்தியாவின் மிகச்சிறந்த ஹனிமூனுக்கான சுற்றுலா ஸ்தலங்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2024, 04:13 PM IST
  • வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் தேனிலவுப் பயணம்.
  • சில ரொமாண்டிக்கான இடங்களைப் பற்றிய தகவல்கள்.
  • இந்தியாவின் மிகச்சிறந்த ஹனிமூனுக்கான சுற்றுலா ஸ்தலங்களை அறிந்து கொள்ளலாம்.
இளம் தம்பதிகளே... ‘இந்த’ ரொமேண்டிக்கான சுற்றுலா இடங்களை மிஸ் பண்ணாதீங்க..!! title=

இளம் தம்பதிகளுக்கான சிறந்த சுற்றுலாத் தலங்கள்: நம் இந்தியாவில் சுற்றுலா இடங்களுக்கு பஞ்சமில்லை. அதில் இளம்  தம்பதிகள் செல்வதற்கான சிறந்த இடங்கள் நாட்டில் பல உள்ளன. நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையுடன் எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டு வரும் நிலையில், எங்கு செல்ல வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றால், இன்று நாங்கள் வழங்கும் சில ரொமாண்டிக்கான இடங்களைப் பற்றி தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

திருமணம் முடித்த உடன் இளம் தம்பதிகள் செல்லக்கூடிய தேனிலவுப் பயணம் என்பது, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத  தருணமாக அமைய வேண்டும். சரியான இடங்களைத் தேர்வு செய்தால் மட்டுமே, இது சாத்தியமாகும் அந்தவகையில் இந்தியாவின் மிகச்சிறந்த ஹனிமூனுக்கான சுற்றுலா ஸ்தலங்களை அறிந்து கொள்ளலாம்.

ஆலப்புழா

தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கேரளாவில் (Kerala) உள்ள ஆழபுழைக்கு விரும்பி வருகிறார்கள். குறிப்பாக தேனிலவு கொண்டாடுவதற்கு புதுமண ஜோடிகள் இங்கு அதிகம் வருகிறார்கள். படகு வீடுகளுக்கு பிரபலமான இடம் ஆலப்புழாவில் இயற்கை சூழ்ந்த பேக்வாட்டரில், மிதக்கும் படகு வீடுகளில் நாள் முழுவதும் பொழுதை இன்பமாக அனுபவிக்கலாம். அது நம் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

கோவா

கோவா அனைவரும் பார்க்க விரும்பும் இடம். உங்கள் துணையுடன் பயணம் செய்வதற்கான சிறந்த இடங்களில் ஒன்று கோவா. இந்தியாவில் தேனிலவுக்கு புதுமணத் தம்பதிகளின் முதல் தேர்வாக கோவா உள்ளது. கோவாவில் உள்ள கடற்கரைகளை பொறுத்தவரை தெற்கு கோவா சிறந்தது. அஞ்சுனா, வகேடோர், சபோரா போன்றவை கோவாவில் இருக்கும் முக்கிய கடற்கரைகள் ஆகும். பழமையான கட்டிடங்கள், கடற்கரை பார்டிகள் என பல ரசனையான அனுபவங்களை நீங்கள் உங்கள் தேனிலவு பயணத்தில் பெற முடியும். 

ஊட்டி

தமிழ்நாட்டின் நீலகிரி மலைக்கு அருகில் அமைந்துள்ள ஊட்டி, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சென்று பார்க்க சிறந்த இடமாகும். ஊட்டி காபி மற்றும் தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த மலை வாசஸ்தலத்தில் உள்ள இயற்கை அழகு உங்கள் அம்னதை கொள்ளை கொள்ளும். இந்த மலைப்பகுதி கர்நாடகா மற்றும் தமிழக எல்லையில் உள்ளது. ஊட்டி ஏரி, தாவரவியல் பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, ரோஸ் கார்டன், காமராஜ் சாகர் ஏரி போன்றவற்றை உள்ளடக்கிய பல சிறந்த இடங்கள் ஊட்டியில் உள்ளன.

மேலும் படிக்க | கேரளா சுற்றுலா செல்ல பிளானா.... அப்ப இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!

மணாலி

ஹிமாச்சலின் மலைப்பகுதியான மணாலி இயற்கை அழகு நிறைந்த மிகவும் ரொமாண்டிக்கான இடம் . இளம் தம்பதிகள் இந்த இடத்தை மிகவும் விரும்புகிறார்கள். நீங்கள் குளிர்காலம் அல்லது கோடை காலத்தில் இங்கு வர திட்டமிடலாம். குளிர்காலத்தில் இங்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கும். கோடை காலத்தில், குளிர்ந்த காற்றை அனுபவிக்க மக்கள் இங்கு வருவார்கள். புதுமணத் தம்பதிகளும் தேனிலவுக்கு இங்கு வர விரும்புகிறார்கள்.

உதய்பூர்

உதய்பூர் ராஜஸ்தானில் பார்க்க மிகவும் அழகான இடம். ஏரிகளின் நகரம் என்று பிரசித்தி பெற்ற உதய்பூர் இளம் தம்பதிகளுக்கு மிகவும் பிடிக்கும். பல தம்பதிகள் சுற்றுலா அல்லது தேனிலவுக்கு இங்கு வர விரும்புகிறார்கள். உதய்பூர் 'கிழக்கின் வெனிஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. ஏரிகள் தவிர, இங்கு அழகிய தோட்டங்கள், அரண்மனைகள் மற்றும் கோட்டைகளைப் பார்க்க முடியும்.

மேலும் படிக்க | குறைந்த செலவில் அந்தமான் டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News