New Demat Account: நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால் அல்லது ஏதேனும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பினால், டீமேட் கணக்கு வைத்திருப்பது கட்டாயமாகும். கடந்த சில ஆண்டுகளில், பங்குச் சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், இதில் முதலீட்டாளர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையில் எளிதாக முதலீடு செய்ய மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் பல நிறுவனங்களும் செயலிகளும் இன்று உள்ளன. இன்றைய காலகட்டத்தில் டீமேட் கணக்கு (Demat Account) மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த கணக்கை சாதாரண மக்களும் அதிக அளவில் திறந்து வருகின்றனர், பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்தியாவில் முன்னர், பாரம்பரிய முறையான நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit) முறையையே மக்கள் தங்கள் சேமிப்பிற்கான சிறந்த முறையாக கருதி வந்தனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில், பங்குகள் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் FD-யின் இடத்தை எடுத்துக்கொண்டுள்ளன. உங்களுக்கும் டீமேட் கணக்கை திறந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வம் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். டிமேட் கணக்கை எப்படி எளிதாகத் திறக்கலாம் என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
ALSO READ: SBI Power Demat Account: அதிரடி கடன் வசதி, இலவச ATM Card, இன்னும் எக்கச்சக்க offers
Demat கணக்கு ஏன் அவசியம்
Demat கணக்கு, முதலீட்டாளர்கள், மின்னணு வடிவத்தில் பங்குகள் மற்றும் முதலீட்டு பத்திரங்களை வைத்திருக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது. Demat கணக்கின் நோக்கம் பங்குச் சான்றிதழ்களை (Share Certificates) மின்னணு வடிவில் மாற்றுவதாகும். முதலீட்டாளர்கள் தங்கள் கணக்குகளை எளிதாக நிர்வகிக்க இது உதவும்.
Demat கணக்கைத் திறக்க என்ன ஆவணங்கள் தேவை?
எந்த வித பிரச்சனையும் இல்லாமல் Demat கணக்கை திறக்க, இதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருக்க வேண்டும். Demat கணக்கைத் திறக்க உங்களுக்கு எந்தெந்த ஆவணங்கள் தேவைப்படும் என்பதை இங்கே காணலாம்.
- ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற இந்திய அரசு அங்கீகரித்த அடையாள சான்றுகள்.
- வீட்டு வாடகை ஒப்பந்தம், ஓட்டுநர் உரிமம் (Driving Licence), பாஸ்போர்ட், லேண்ட்லைன் தொலைபேசி பில், மின்சார கட்டணம், எரிவாயு பில் போன்ற முகவரி சான்று.
- வங்கி பாஸ்புக் அல்லது வங்கி அறிக்கை. இது உங்கள் வங்கிக் கணக்கின் சான்றாக இருக்கும். இந்த வங்கி அறிக்கை (Bank Statement) மூன்று மாதங்களுக்கு மேல் பழைய அறிக்கையாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- சமீபத்திய சம்பள சீட்டு அல்லது உங்கள் வருமான வரி கணக்கு. இது உங்கள் வருமானத்தின் சான்றாக இருக்கும்.
இந்த எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி உங்கள் டிமேட் கணக்கைத் திறக்கலாம்:
Step 1: முதலில் உங்கள் தேவைக்கு ஏற்ப உங்கள் depository participant-ஐத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவில், இதற்கு National Securities Depositories Ltd (NSDL) மற்றும் Central Depositories Services Ltd (CDSL) ஆகிய தேர்வுகள் கிடைக்கின்றன. இந்தியாவில் வங்கிகள், பங்கு தரகர்கள் மற்றும் ஆன்லைன் முதலீட்டு தளங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.
Step 2: NSDL அல்லது CDSL இலிருந்து, நீங்கள் தேர்ந்தெடுக்கும் depository participant-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். அதில் உள்ள புதிய Demat கணக்கு படிவத்தை நிரப்பவும். மேலும், உங்கள் கணக்கிற்கு ஒரு நாமினியின் பெயரையும் உள்ளிடவும்.
Step 3: இதனுடன், உங்கள் KYC விவரங்களையும் இங்கே உள்ளிடவும்.
Step 4: அடையாள சான்று, முகவரி சான்று, வங்கி கணக்கு அறிக்கை மற்றும் வருமான ஆதாரம் உட்பட அனைத்து KYC ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை சமர்ப்பிக்கவும்.
Step 5: இதற்குப் பிறகு நீங்கள் 'In-Person Verification' (IPV) சரிபார்ப்பு செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். இது ஒரு கட்டாய நடவடிக்கை ஆகும். இந்த சரிபார்ப்பு செயல்முறையை ஆன்லைனிலோ அல்லது உங்கள் depository participant-ன் அலுவலகத்திற்கோ சென்று செய்யலாம்.
Step 6: இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் depository participant உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் உங்களுக்கும், depository participant -க்கும் இடையிலான உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய தகவல்கள் இருக்கும்.
Step 7: உங்கள் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு, உங்கள் டிமேட் கணக்கு திறப்பு கோரிக்கை ஏற்கப்படும்.
Step 8: கடைசியாக, உங்களுக்கு ஒரு தனிப்பட்ட 'யுனிக் பெனிஃபிசியல் ஓனர் ஆதெண்டிஃபிகேஷன் நம்பர்' (BO ID) வழங்கப்படும். இதன் உதவியுடன், உங்கள் டிமேட் கணக்கை ஆன்லைனில் நீங்கள் அணுகலாம்.
தகவல்: டீமேட் கணக்கை வர்த்தக கணக்குடன் இணைப்பது கட்டாயமாகும்.
ALSO READ: September மாதம் முடிக்க வேண்டிய பணிகள் இதோ: முடிக்காவிட்டால் அபராதம்!!
ALSO READ: 7th Pay Commission: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிப்பதால் ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR