Bank Holidays In September: செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை!

இந்திய ரிசர்வ் வங்கியின் காலண்டரின் படி, செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 8 விடுமுறைகள், இது தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 6 நாட்கள் என மொத்தமாக 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.   

Written by - RK Spark | Last Updated : Aug 24, 2022, 10:22 AM IST
  • செப்டம்பரில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.
  • ஆகஸ்ட் மாதம் 18 நாட்கள் விடுமுறையாக இருந்தது.
  • முன்கூட்டியே வங்கி வேலைகளை முடித்துக்கொள்ள கோரிக்கை.
Bank Holidays In September: செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை! title=

பெரும்பாலான மக்களுக்கு வங்கிகள் சார்ந்து ஏதேனும் வேலை உள்ளது, பலரும் வங்கி கணக்குகளின் மூலம் தான் பல தொகையை மாற்றி வருகின்றனர். இவ்வாறு பலரும் வங்கிகளை சார்ந்து இருக்கும் சமயத்தில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது அவர்களுக்கு சில சமயங்களில் சிரமங்களை ஏற்படுத்திவிடுகிறது.  அவ்வாறு சிரமத்தை அனுபவிக்காமல் இருக்க முன்கூட்டியே வங்கிகளின் விடுமுறை நாட்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது.  தற்போது ஆகஸ்ட் மாதம் நிறைவடைய போகிறது, அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால் அதற்கேற்ப உங்களது வேலைகளை முடிவு செய்துகொள்ளலாம்.  ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருந்தது.

செப்டெம்பர் மாதம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை இப்போதே திட்டமிட தொடங்குங்கள் அப்பொழுது தான், நீங்கள் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று ஏமாறாமல் இருக்கலாம்.  இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின்படி, செப்டம்பரில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற விடுமுறை நாட்களுக்கான விடுமுறை காலண்டரை சரிபார்க்கவும்.  இந்திய ரிசர்வ் வங்கியின் காலண்டரின் படி, செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 8 விடுமுறைகள் உள்ளன, இது தவிர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.  இதன்படி செப்டம்பர் மாதம் முழுவதும் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.  அதேசமயம் வங்கிகளுக்கு அளிக்கப்படும் இந்த விடுமுறைகளானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக்கூடும்.  

மேலும் படிக்க | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

செப்டம்பர் 1-ம் தேதி விநாயக சதுர்த்தி (இரண்டாம் நாள்) காரணமாக கோவாவின் பனாஜியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.  செப்டம்பர் 6-ல் ஜார்கண்டில் கர்ம பூஜையை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.  ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் விடுமுறை.  இந்திரஜாதா காரணமாக சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் செப்டம்பர் 9-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை.  ஸ்ரீ நரவனே குரு ஜெயந்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 ஆம் தேதி திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.  செப்டம்பர் 21ம் தேதி ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தையொட்டி திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் வங்கிகளுக்கு விடுமுறை. செப்டம்பர் 26ம் தேதி, நவராத்திரி விழாவையொட்டி, மணிப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் மற்றும் இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | EPF பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News