முக்கிய அப்டேட்; மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை

விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 1, 2022, 06:55 AM IST
  • மார்ச் இல் 13 நாட்கள் வங்கி விடுமுறை
  • ரிசர்வ் வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது
  • முழுமையான பட்டியலை இங்கே சரிபார்க்கவும்
முக்கிய அப்டேட்; மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை title=

மார்ச் 2022ல் வங்கிகளுக்கு விடுமுறை: இன்று முதல் மார்ச் மாதம் தொடங்குகிறது. மார்ச் 2022க்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, மார்ச் 2022ல் மொத்தம் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். ஆனால், இந்த நாட்களில் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் அனைத்தும் செயல்படும்.

இந்த 13 இல், 7 இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்களின் காலண்டர் பட்டியலின்படி கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விடுமுறைகள் வார இறுதி நாட்கள், சனி மற்றும் ஞாயிறுகள் ஆகும். அத்துடன் அனைத்து மாநிலங்களிலும் அல்லது அனைத்து பிராந்தியத்திலும் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்காது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! உங்கள் பேஸ்புக், கூகுள் கணக்குகள் ஹேக் செய்யப்படலாம்; தவிர்ப்பது எப்படி!

இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநில அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களையும் சேர்த்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, பீகாரில் கொண்டாடப்படும் பீகார் திவாஸ் பண்டிகை நாளில், அங்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றாலும், இது அஸ்ஸாம், திரிபுரா போன்ற பிற மாநிலங்களுக்கு பொருந்தாது.

ஆகவே, வங்கி விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

மார்ச் 2022 மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல்
மார்ச் 01, 2022: மகாசிவராத்திரி
மார்ச் 03, 2022: லோசர்
மார்ச் 04, 2022: சாப்சார் குடு
மார்ச் 06, 2022: ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 12 2022: இரண்டாவது சனிக்கிழமை:
மார்ச் 13 2022: ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 17 2022: ஹோலிகா தஹான்
மார்ச் 18 2022: ஹோலி/ஹோலி இரண்டாம் நாள் துலேட்டி/டோல்ஜாத்ரா
மார்ச் 19 2022: ஹோலி/யோசாங் இரண்டாம் நாள்
மார்ச் 22 2022: பீகார் தினம்
மார்ச் 26 2022: நான்காவது சனிக்கிழமை
மார்ச் 27 2022: ஞாயிற்றுக்கிழமை

மேலும் படிக்கலாம் | Flipkart Sale: ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இந்த லேப்டாப் வெறும் ரூ.15 ஆயிரத்துக்கு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News