Auto Insurance விதிகளில் மாற்றம்: பம்பர்-டு-பம்பர் காப்பீடு என்றால் என்ன..!!

புதிய வாகனங்களுக்கு 'பம்பர்-டூ-பம்பர்' (Bumper-to-bumper Insurance) காப்பீடு கட்டாயமாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 26, 2021, 04:18 PM IST
Auto Insurance விதிகளில் மாற்றம்: பம்பர்-டு-பம்பர் காப்பீடு என்றால் என்ன..!!  title=

புதிய வாகனங்களுக்கு 'பம்பர்-டூ-பம்பர்' (Bumper-to-bumper Insurance) காப்பீடு கட்டாயமாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் பம்பர் டு பம்பர் காப்பீடு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 

பம்பர்-டு-பம்பர் காப்பீடு என்பது அடிப்படையில் ஒரு வகை கார் காப்பீடாகும். இது வாகனத்தின் பாகங்களின் தேய்மானம் என்பது எந்த அளவில் இருந்தாலும், முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. இதன் பொருள் நீங்கள் ஒரு விபத்தை எதிர்கொள்ளும் போது, அதனால் சேதம் ஏற்படும் போது, ​​காப்பீடு வழங்கும் நிறுவனம் கொடுக்கும் இழப்பீட்டில், தேய்மான மதிப்பை கழிக்காமல்,  வழங்கும். கூடுதலாக, மோட்டார் வாகன காப்பீட்டாளர் உங்கள் வாகனத்தின்  உடல் பாகங்களை மாற்றுவதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வார். 

இருப்பினும், எண்ணெய் கசிவுகள் அல்லது நீர் ஊடுருவினால் ஏற்படும் சேதத்தை, காப்பீட்டு நிறுவனம் ஈடுசெய்யாது. ஒரு குறிப்பிட்ட வருடத்தில் நீங்கள் எத்தனை முறை காப்பீடு கோரலாம் என்பதற்கான சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன.

ALSO READ | பம்பர் டு பம்பர் காப்பீட்டை கட்டாயமாக்கவும்:  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

பம்பர் டு பம்பர் காப்பீடு  என்பது உங்களுக்கு பரந்த அளவிலான கவரேஜை அளிக்கும் அதே வேளையில், இந்த வகை பாலிசிக்கு நீங்கள் அதிக பிரீமியம் செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது உங்கள் அடிப்படையான விரிவான கார் காப்பீட்டு பாலிஸியை விட குறைந்தபட்சம் 20 முதல் 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும்.

இருப்பினும், அதில் அதிக நன்மைகளும் உள்ளன. இந்த பாலிசியை பாலிசி வாங்கும் போது பெறலாம். அல்லது புதுப்பிக்கும்  நேரத்தில் இதைப் பெறலாம். புதிய கார்கள் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு  வாங்கும் போது இது மிகவும் நன்மை பயக்கும். 

ALSO READ | வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News