ஆஸ்திரேலியாவில் கழிப்பறைக்குச் சென்றிருந்த பெண்மணியை மலைப்பாம்பு ஒன்று கடித்துள்ள சம்பபம் பெரிய அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
59 வயதுடைய ஹெலன் ரிச்சர்ட்ஸ் என்ற பெண் பிரிஸ்பேனில் (Brisbane) வசித்த தமது உறவினரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் அதிசயம் என்னவென்றால் அந்த மலைப்பாம்புக்கு நச்சு தன்மை இல்லை.
அந்த மலைப்பாம்பின் நீளம் 5 மீட்டர் அளவானது. வெளியே வெப்பமாக இருந்ததால் கழிப்பறையில் உள்ள தண்ணீரில் சிறிது நேரம் இளைப்பாறுவது பாம்புகளுக்கு வழக்கமானது என்றனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள். கழிப்பறையில் உட்கார்ந்தபோது, பின்புறத்தில் தட்டுவதுபோல் உணர்வு ஏற்பட்டதால் எழுந்து நின்ற அந்த பெண் பாம்பைப் பார்த்திருக்கிறார். நச்சு தன்மை இல்லாத காரணத்தால் அந்த பெண் உயிர் தப்பினார்.