Flipkart sale: வெறும் ரூ.8999-ல் கிடைக்கும் அட்டகாச டிவி, இன்னும் பல சலுகைகள்

இந்த ஜூன் மாதத்தில் புதிய ஸ்மார்ட் டிவி, சலவை இயந்திரம் அல்லது ஏர் கூலரை வாங்குவது பற்றி நீங்கள் சிந்தித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு ஒரு மிக நல்ல வாய்ப்பு வந்துள்ளது. Flipkart-டின் Big Saving Day Extension Sale தொடங்கிவிட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2021, 10:06 PM IST
  • ஃபிளிப்கார்டின் சேலில் பல வித பொருட்களில் நல்ல சலுகைகள் கிடைக்கின்றன.
  • ஃபிளிப்கார்டின் சேலில் கோடாக் ஸ்மார்ட் டிவிக்களில் அதிக சலுகைகளை பெறலாம்.
  • அமேசானிலும் கூலர் உட்பட பல மின்னணு பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Flipkart sale: வெறும் ரூ.8999-ல் கிடைக்கும் அட்டகாச டிவி, இன்னும் பல சலுகைகள் title=

Flipkart’s Big Saving Day Extension Sale: இந்த ஜூன் மாதத்தில் புதிய ஸ்மார்ட் டிவி, சலவை இயந்திரம் (Washing Machine) அல்லது ஏர் கூலரை வாங்குவது பற்றி நீங்கள் சிந்தித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு ஒரு மிக நல்ல வாய்ப்பு வந்துள்ளது. Flipkart-டின் Big Saving Day Extension Sale தொடங்கிவிட்டது. இந்த விற்பனையில் நீங்கள் Thomson மற்றும் Kodak பொருட்களை வாங்கினால் உங்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும். 

ஃபிளிப்கார்டின் இந்த சேல் (Flipkart Sale) ஜூன் 17 முதல் ஜூன் 21 வரை இருக்கும். இந்த விற்பனையில் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பற்றி இங்கே காணலாம்.

இந்த பொருட்களில் நல்ல சலுகைகளை பெறலாம்

Flipkart’s Big Saving Day Extension Sale-ல் தாம்சனின் ஸ்மார்ட் டி.வி, சலவை இயந்திரங்கள் மற்றும் ஏர்-கூலர்களில் சிறந்த சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்றங்களை (Exchange Offers) நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். Thomson-னில் தற்போது 24 இஞ்ச் முதல் 75 இஞ்ச் வரையிலான ஸ்மார்ட் டிவிகள் உள்ளன. இந்த விற்பனையில் நீங்கள் அவற்றை குறைந்த விலையில் வாங்கலாம். இந்த சேலில், தாம்சன் டிவியை ரூ .9499 முதல் அட்டகாச விலையில் வாங்கலாம். தாம்சனின் ஸ்மார்ட் டிவிக்கள் தரம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த சலுகைகளைப் பெறுங்கள் 

Flipkart’s Big Saving Day Extension Sale-ல் தாம்சனின் ஏர் கூலர்களில் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. தாம்சனில் தற்போது மூன்று அளவிலான ஏர்-கூலர்கள் கிடைக்கின்றன. இவை 50L, 70L மற்றும் 90L ஆகிய மாடல்களாகும். இவற்றை நீங்கள் சிறந்த சலுகைகளில் வாங்க முடியும். அவை முறையே ரூ. 5699, ரூ. 7599 மற்றும் ரூ. 8299 என்ற விலையில் கிடைக்கின்றன. இது தவிர, நீங்கள் நிறுவனத்தின் சலவை இயந்திரங்களையும் (Washing Machine) சிறந்த விலையில் வாங்கலாம். நிறுவனம் தற்போது 6.5 கிலோ முதல் 10.5 கிலோ வரை சலவை இயந்திரங்களை தயாரிக்கிறது, அவை அரை தானியங்கி (Semi-automatic) மற்றும் முழு தானியங்கி (Fully automatic) ஆகிய வகைகளில் கிடைக்கின்றன. ஃபிளிப்கார்டின் இந்த விற்பனையில், அவற்றின் விலை ரூ .6999 முதல் ரூ .28,499 வரை உள்ளது.

ALSO READ: Flipkart Big Saving Days Sale: இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் தள்ளுபடி

Kodak டிவிகளை சிறந்த விலையில் வாங்கலாம்

பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டே எக்ஸ்டென்ஷன் விற்பனையில், கோடக்கின் ஸ்மார்ட் டிவியை சிறந்த விலையில் வாங்க வாய்ப்பு உள்ளது. மேலும், உங்களிடம் ஆக்சிஸ் வங்கியின் (Axis Bank) டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இருந்தால், உங்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். 

இந்த விற்பனையில், கோடக்கின் 24 அங்குல டிவியை வெறும் ரூ .8999 க்கு வாங்கலாம். இது தவிர, நிறுவனத்தின் 32 இஞ்ச், 40 இஞ்ச், 42 இஞ்ச், 43 இஞ்ச், 50 இஞ்ச், 55 இஞ்ச் மற்றும் 65 இஞ்ச் ஸ்மார்ட் டிவிகளில் மிகச் சிறந்த சலுகை வழங்கப்படுகிறது. கோடக்கின் ஸ்மார்ட் டிவிகள் சிறப்பான தரத்திற்கு பெயர் பெற்றவை.

அமேசானில் அபார தள்ளுபடி கிடைக்கிறது

அமேசானிலும் (Amazon), கூலர் உட்பட பல மின்னணு பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதில் பஜாஜின் கூலர்களுக்கு 33 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடிக்குப் பிறகு, நீங்கள் இந்த கூலரை நீங்கள் ரூ .8999-க்கு வாங்கிச் செல்லலாம்.

ALSO READ: Flipkart Big Saving Days Sale: மின்னணு சாதனங்கள், மொபைல் போன்களில் அதிரடி தள்ளுபடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News