அமைதியான குணத்தால் மக்கள் மனதை வெல்லும் ‘4’ ராசிக்காரர்கள்!

ஜோதிட சாஸ்திரத்தில், அனைத்து 12 ராசிகளுக்கும் இருக்கும் வெவ்வேறு குணங்கள் குறித்து  குறிப்பிடப்பட்டுள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 27, 2022, 04:57 PM IST
அமைதியான குணத்தால் மக்கள் மனதை வெல்லும் ‘4’ ராசிக்காரர்கள்! title=

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணங்கள், பலன்கள் மற்றும் தோஷங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களுக்கும் சில சிறப்பு குணங்கள் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், அமைதியாக மக்கள் மனதை வெல்லும்  4 ராசி களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அமைதியானவர்கள் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்கள். எந்த ஒரு வேலையையும் பொறுமையுடன் செய்வார்கள். அவர்கள் கோபத்தினால், ஆத்திரத்தினால் எதையும் இழக்க விரும்ப மாட்டார்கள். மேலும், எந்த ஒரு பிரச்சனையையும் அமைதியாக சமாளிக்க விரும்புவார்கள்.

சிம்மம்

இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள்.  கோபம் என்பது, மிகவும் அரிதாகவே காணப்படும் . இதனுடன், இந்த ராசிக்காரர்கள் பாதகமான சூழ்நிலைகளிலும் மிகவும் கவனமாக வேலை செய்கிறார்கள். இது தவிர, பொறுமையை இழப்பது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பார்கள்.

மேலும் படிக்க | Admirable Zodiac: கவர்ச்சியான ராசிகள்! எதிரில் இருப்பவர்களை வசீகரிக்கும் ராசி உங்களுடையதா?

துலாம்

துலாம் ராசிக்காரர்களும் மிகவும் அமைதியான இயல்புடையவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு சீக்கிரம் கோபம் வராது. யாராவது அவர்களை அதிகம் தொந்தரவு செய்தால் கூட, அவர்கள் கோபப்படாமல், அமைதியாக நிலைமையை கையாளவார்கள். பொதுவாக அவர்கள் அமைதியாகவும் மிகவும் புத்திசாலித்தனமாகவும் முடிவுகளை எடுப்பார்கள்.

தனுசு 

தனுசு ராசிக்காரர்கள் மிகவும் அமைதியான இயல்புடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டாமல் மறைத்து வைத்திருப்பார்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த  மாட்டார்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் பிறருக்கு உதவுவதில் தயக்க காட்ட மாட்டார்கள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News