Honey trap: ஹனிட்ராப் மோசடியில் சிக்கிய ஜோதிடர்! 49 லட்சம் பறிகொடுத்த சோகம்!

பிரச்சினைகளை தீர்க்க வந்த ஜோதிடருக்கே பிரச்சனை கொடுத்து சிக்கலில் சிக்க வைத்த ஹனிடிராப் மோசடி...  

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 22, 2022, 04:26 PM IST
  • காதல் வலையில் சிக்கி ஏமாந்த ஜோதிடர்
  • பூசாரியை ஹனிட்ராப் மோசடியில் சிக்க வைத்த தம்பதிகள்
  • 49 லட்சம் ஹனிடிராப் மோசடி
Honey trap: ஹனிட்ராப் மோசடியில் சிக்கிய ஜோதிடர்! 49 லட்சம் பறிகொடுத்த சோகம்! title=

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த தம்பதிகள் வீட்டில் பூஜை செய்ய வந்த பூசாரியையே தங்கள் வலையில் விழச் செய்து  பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா  சனிவாரசந்தை பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பவ்யா. இவர் தனது இரண்டாவது கணவரான ராஜு என்கின்ற குமாருடன் சேர்ந்து பணம் பறிக்கும் மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.

இரண்டாவது கணவருடன் மங்களூரில் உள்ள பதவினங்கடி என்ற பகுதியில்  வாடகை வீடு எடுத்து தங்கி வசித்து வந்த பவ்யா, வீட்டில் நிம்மதி இல்லை என்று கூறி சிக்கமகளூரு வைச் சேர்ந்த அர்ச்சகரை பூஜைகள் செய்ய அழைத்து வந்தனர்.

பூஜைகள் நடந்ததோ இல்லையோ, இவர்கள் தங்கள் மோசடி பணப்பறிப்பு (Fraudulent Couple) செயலில் வெற்றி பெற்றார்கள்.

ALSO READ | Forced Conversion: பள்ளியில் கட்டாய மத மாற்றம்; பள்ளி சிறுமி தற்கொலை..!!

பவ்யா, பூசாரியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, அடிக்கடி அர்ச்சகரை தொடர்பு கொண்ட பவ்யா,  வீடியோவை மூகவலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி அடிக்கடி பணம் பறித்து வந்திருக்கிறார்.

பெயர் கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் 49 லட்சம் வரை பணத்தை பறி கொடுத்த அவர், அதன்பிறகு வேறு வழியில்லாமல், மங்களூர் புறநகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த மங்களூர் புறநகர் போலீசார் மற்றும் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரசாத் தலைமையிலான போலீஸ் படை நேற்று பவ்யா மற்றும் பவ்யாவுக்கு உடந்தையாக இருந்த ராஜு என்கின்ற குமாரை கைது செய்தனர்.

 கைது செய்தவர்களிடம் (Police Arrest) நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ALSO READ | மாணவி தற்கொலை: போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

இவர்கள் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இதுபோல் "ஹனி டிராப்"என்ற முறையில் ஆட்களை வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் அந்த வீடியோவை வெளியிடுவோம் என்று கூறி பணம் பறித்த விவரமும் தெரிய வந்துள்ளது.

தற்போது பவ்யாவிடம் விசாரணை செய்வதற்காக அவரை ஐந்து நாள் போலீஸ்  காவலில் எடுத்துள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக இன்ஸ்பெக்டர் பிரசாத் தெரிவித்துள்ளார் .

பிடிபட்ட இந்த தம்பதிகளிடம் இருந்து ஒரு புதிய மோட்டார் சைக்கிள், 4 செல்போன்கள், 37 ஆயிரம் ரொக்கப்பணம் 30 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு தங்கமோதிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, பவ்யாவும் அவரது இரண்டாவது கணவரும் தற்போது குடியிருக்கும்  அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு கொடுக்கப்பட்ட 10 லட்சம் பணம் லீஸ் பணம், பூசாரியிடம் வாங்கியது என்பதும் தெரியவந்துள்ளது.

ALSO READ | கணினியில் துவங்கி கைவிலங்கில் முடிந்த காதல் மோசடி!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News