Astro: புத ஆதித்ய யோகத்தினால் பிரகாசிக்க போகும் ‘5’ ராசிகள்..!!

ஜோதிடத்தில்,  எந்த ஒரு கிரகத்தின் பெயர்ச்சி அல்லது இணைவு மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரக பெயர்ச்சி அல்லது இணைவு, 12 ராசிகளில் சிலருக்கு பலன் தருவதாகவும், சிலருக்கு கஷ்டங்களை தருவதாகவும் இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 23, 2022, 10:39 AM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம் 6-ம் வீட்டில் உருவாகி வருகிறது.
  • இந்த நேரத்தில் உங்களுக்கு திடீர் பணம் வரலாம்.
  • சிக்கிய பணம் கூட எங்கிருந்தோ திரும்ப கிடைக்கலாம்.
Astro: புத ஆதித்ய யோகத்தினால் பிரகாசிக்க போகும் ‘5’ ராசிகள்..!! title=

ஜோதிடத்தில்,  எந்த ஒரு கிரகத்தின் பெயர்ச்சி அல்லது இணைவு மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரக பெயர்ச்சி அல்லது இணைவு, 12 ராசிகளில் சிலருக்கு பலன் தருவதாகவும், சிலருக்கு கஷ்டங்களை தருவதாகவும் இருக்கும். இம்முறை புத ஆதித்ய யோகம் மார்ச் 24ஆம் தேதி உருவாகிறது. இந்த யோகத்தின் பலன் 12 ராசிகளுக்கும் இருக்கும் என்றாலும், இந்த யோகம் அமைவதால் 5 ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.

வெற்றி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை ஆகியவற்றுக்கு காரணமான சூரியனும் (Sun), புத்திசாலித்தனம், செல்வச்செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான புதனும் (Mercury) விரைவில் கூட்டணி அமைக்க உள்ளனர். 

சூரியதேவன் மார்ச் 15, 2022 அன்று மீன ராசியில் சஞ்சரித்த நிலையில், மார்ச் 24 அன்று புதன் கிரகம் மீன ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். சூரிய பகவான் ஏற்கனவே இந்த ராசியில் அமர்ந்திருப்பதால் சூரியனும் புதனும் இணைந்து புதாதித்ய யோகம் உருவாகிறது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | குருவின் உதயத்தால் 7 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சூப்பர்

மிதுனம் - புத ஆதித்ய யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த யோகம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் அமைகிறது. இது கர்மா, தொழில், வேலை மற்றும் வணிக உணர்வாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், புதன் கிரகத்தின் தாக்கத்தால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும்.

கடகம் - உங்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும், வெளிநாட்டு பயணமும் கை கூடும். இந்த யோக காலத்தில் உங்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும். இந்த காலத்தில் எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.

கன்னி- கன்னி ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம்  6-ம் வீட்டில் உருவாகி வருகிறது. இந்த வீடு தொழில் மற்றும் திருமண வாழ்க்கையின் வீடாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். தொழிலில் குறிப்பாக, கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் புதிய திட்டங்களைத் தொடங்குவது நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | இன்றைய தினத்தன்று மறந்துகூட இதனை செய்துவிடாதீர்கள்

ரிஷபம் - புத ஆதித்ய யோகம் 11 ஆம் வீட்டில் உருவாகிறது. இதனால், ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் உங்கள் வருமானம் கூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலை மேம்படும். புதிய தொழில் உறவுகளும் உருவாகும்.

கும்பம் - உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் புத்தாதித்ய யோகம் உருவாகி வருகிறது. இது பண வரவுக்கான வீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு திடீர் பணம் வரலாம். சிக்கிய பணம் எங்கிருந்தோ பெறலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | 2022-ல் 2 முறை ராசி மாறுகிறார் சனிபகவான்: இவர்களுக்கு அடித்தது 2 மடங்கு அதிர்ஷ்டம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Trending News