உங்கள் வீட்டை மழைக்காலத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஏசியன் பெயிண்ட்

உங்கள் வீட்டின் சுவற்றில் மற்றும் மொட்டை மாடிகளில் நீர்ப் புகாத் தன்மையை ஏற்படுத்துவதோடு, மழைக்கால துயரங்களில் இருந்தும் உங்களை பாதுகாக்க ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தை நம்பலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Jun 26, 2021, 10:41 AM IST
உங்கள் வீட்டை மழைக்காலத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஏசியன் பெயிண்ட்  title=

இந்தியாவில் பருவமழை துவங்கும் காலம் தொடங்கவுள்ளது. இது கோடைக்காலம் நிறைவு பெறுவதை குறிக்கிறது. மழை காலத்தில் பொழியும் மழை காரணமாக ஏற்படும் மண் வாசனையை நுகர்ந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மழையை கொண்டாட துவங்குகின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சி எப்பொழுது ஏற்படும் என்றால், உங்கள் வீட்டின் மேற்கூரை மூலம் மழை நீர் புகாதவாறு இருப்பதன் மூலமே, மழைக்காலத்தை நம்மால் ரசிக்க முடியும். உங்கள் வீட்டின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளை நீர்ப்புகாத் தன்மை கொண்டதாக மாற்றுவதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும். வீட்டின் மேற்கூரையை, நீர்ப்புகாத் தன்மையாக மாற்றாவிட்டால், சுவர்களுக்கு உள்ளே நீர் கசிந்து, மழைக்காலத்தின் சந்தோஷத்தை நாம் அனுபவிக்க முடியாமல் செய்துவிடும்.

மழைக்காலத்தில், இந்தியாவின் சில மாநிலங்கள் தொடர்ச்சியான மழைப்பொழிவை பெறுகின்றன. இதன்காரணமாக, வீட்டின் மேற்கூரையில் மழைநீர் தேங்குகிறது. வீட்டு கட்டமைப்பிற்குள், மழைநீர் புகும்போது, அது இரும்புக்கம்பிகளை துருப்பிடிக்க செய்துவிடுகின்றன. சுவற்றில் நீண்ட நேரம் ஈரப்பதம் இருப்பதன் மூலம், கசிவுகள் ஏற்பட காரணமாக அமைகின்றன. வீட்டின் மேற்கூரையை, நீர்ப்புகாத் தன்மையுடையதாக மாற்றுவதன் மூலம், மழைக்கால துயரங்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் மற்றும் நீண்ட காலத்திற்கு, நமது வீட்டின் கட்டமைப்பு ஒருங்கமைப்பை பாதுகாக்க முடியும்.

மழை மற்றும் வெப்பத்தில் இருந்து வீட்டை பாதுகாக்கிறது:
இயற்கையை நாம் ஒருபோதும் கணிக்க முடியாது. சில சமயங்களில், கோடை காலத்திலோ அல்லது மழைக்காலத்திலோ, நாம் நம் வீட்டை இனிமையாக மாற்றி அமைப்பதில், சில தடங்கல்கள் இருக்கலாம். வீட்டை பாதுகாப்பதற்கான பொறுப்பு, அங்கு வசிப்பவர்களிடம் தான் உள்ளது. இதை அவர்கள் கடினமாக பணியாக ஒருபோதும் கருதக் கூடாது. வீட்டின் வெளிப்புற சுவர்கள் மற்றும் மேற்கூரை பகுதியில் நீர்ப்புகாத் தன்மையை ஏற்படுத்துவது, வீட்டு உரிமையாளர்களுக்கு சிறந்த தீர்வாக அமையும். இது உங்கள் வீட்டிற்கு 360 டிகிரி அளவிலான பாதுகாப்பை அளிக்கிறது. இதுதவிர, வீட்டின் மேற்புற பகுதி அல்லது மேற்கூரை பகுதிகளில் நீர்ப்புகாத் தன்மையை ஏற்படுத்துவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

நீர்ப்புகாத் தன்மையின் நன்மைகள்:
1. வீடு மற்றும் மேற்கூரை பகுதியின் வாழ்நாளை அதிகரிக்க உதவுகிறது.
2. கட்டடடத்திற்கு ஏற்படும் சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. 
3. மழையினால் ஏற்படும் சேதங்களில் இருந்து பாதுகாத்து, வீட்டின் அழகை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.

 

மழையில் இருந்து பாதுகாக்கிறது:
நீர்ப்புகாத் தன்மையை ஏற்படுத்துவதில் பல்வேறு வணிக அளவிலான நன்மைகளும் உள்ளன. உங்கள் வீட்டிற்கு நீர்ப்புகா வசதி ஏற்படுத்துவது என்பது உங்கள் பட்ஜெட்டில் பெரிய அளவிலான பாதிப்பினை ஏற்படுத்துவது இல்லை. இது வீட்டின் அழகை தொடர்ந்து பராமரிப்பதால், வீட்டின் மதிப்பு எப்போதும் குறைவது இல்லை. 360 டிகிரி நீர்பு்பகா தன்மைக்கான தீர்வுக்கு, தொழில்முறை சார்ந்த நிபுணர்களின் உதவியை நாட வேண்டும். இதுதொடர்பாக, நீங்கள், இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints) நிறுவனத்தை நம்பலாம். வீட்டின் சுவர்கள், மொட்டை மாடிகள், வீட்டின் வெளிப்புற பகுதிகளை ஆண்டு முழுவதும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு, அதாவது நீங்கள் ஏசியன் பெயிண்ட் ஸ்மார்ட்கேர் டம்ப் ப்ரூஃப் (Asian Paints SmartCare Damp Proof) மற்றும் ஏசியன் பெயிண்ட் ஸ்மார்ட்கேர் டம்ப் ப்ரூஃப் அல்ட்ரா (Asian Paints SmartCare Damp Proof Ultra) சேவைகளை பயன்படுத்தலாம். இவற்றில் எது உங்களுக்கு தேவை என்பதை தேர்ந்து எடுங்கள். மற்ற பணிகளை நிபுணர் பார்த்துக்கொள்வார்.

1. ஏசியன் பெயிண்ட் ஸ்மார்ட்கேர் டம்ப் ப்ரூஃப்: 8 ஆண்டுகள் வாரண்டி கிடைக்கும். வீட்டின் மேற்புற பகுதியின் வெப்பத்தை 10 டிகிரி வரை குறைக்கும்

2. ஏசியன் பெயிண்ட் ஸ்மார்ட்கேர் டம்ப் ப்ரூஃப் அல்ட்ரா: 10 ஆண்டுகள் வாரண்டி கிடைக்கும் மற்றும் வீட்டின் மேற்புற பகுதியின் வெப்பத்தை 12 டிகிரி வரை குறைக்கும்.

சூரிய ஒளியின் காரணமாக வீட்டின் மேற்புறத்தில் விரிசல்:

நீர்ப்புகாத் தன்மை என்பது மழை பாதுகாப்புக்கு மட்டுமல்ல, இது வீட்டின் மேற்பரப்பை அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது. எந்தெவாரு வீட்டின் மேற்புறப் பகுதி என்பது, வெளிப்படையான பகுதி ஆகும். இந்தியாவில் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் நிலவும் கோடைக்காலத்தில், வீட்டின் மேற்கூரை மற்றும் மொட்டை மாடிப் பகுதிகளில், நேரடியா சூரியஒளி படுவதால், வெப்பத்தின் காரணமாக, மேற்புறப் பகுதியில் விரிசல்கள் ஏற்படும். இந்த விரிசல்களின் மூலம், எதிர்காலத்தில் நீர் கசிவுக்கான சாத்தியங்கள் உருவாகுகிறது. வீட்டின் மேற்கூரை அல்லது மொட்டை மாடி பகுதிகளில் நீர்ப்புகாத் தன்மையை ஏற்படுத்துவதே, இதற்கான தீர்வு ஆகும். 


உங்கள் வீட்டில் நீங்கள் ஏற்கனவே, நீர்ப்புகா வசதியை ஏற்படுத்தி இருந்தால், மழையை உற்சாகமாக கொண்டாட தயாராகுங்கள். மாறாக, Asian Paints நிறுவனத்தை தொடர்பு கொண்டு, அவர்களின் திறமையான வல்லுனர்கள், உங்கள் வீட்டின் நீர்ப்புகாத் தேவைகளை கவனித்து கொள்வார்கள்.

மேலும் அதிக விபரங்களுக்கு https://www.asianpaints.com/products/waterproofing-solutions.html என்ற வெப்சைட் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News