மழையில் இருந்து தப்பிக்க... தரமான ரெயின்கோட் வாங்குங்க - ஆன்லைனில் கிடைக்கும் டாப் மாடல்கள் இதோ!

Top Rated Raincoats In Amazon: இந்த மழைக்காலத்தில் தரமான ரெயின்கோட் வாங்க வேண்டும் என நினைத்தால் அமேசானில் கிடைக்கும் இந்த டாப் மாடல்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 14, 2024, 04:13 PM IST
  • மழைக்காலத்தில் கொடை பயனளிக்காது.
  • மழைக்காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் சற்று பாதிக்கப்படும்.
  • இரு பாலினத்தவர்களும் பயன்படுத்தும் ரெயின்கோட்களும் உள்ளன.
மழையில் இருந்து தப்பிக்க... தரமான ரெயின்கோட் வாங்குங்க - ஆன்லைனில் கிடைக்கும் டாப் மாடல்கள் இதோ! title=

Top Rated Raincoats In Amazon: கோடைக்காலம் முடிந்து தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கிவிட்டது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழைப் பொழிவதை காண முடிந்தது. இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடங்கி லேசான சாரல் மழை என பல பகுதிகள் இந்த பருவமழையால் பயனடைந்துள்ளன.

இருப்பினும், இதுபோன்ற மழைக்காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் சற்று பாதிக்கப்படும். சாலைகளில் மழைநீர் தேங்குதல், அடிக்கடி மின்தடை ஏற்படுதல், உடல்நிலை பாதிக்கப்படுதல் என தொடர்ந்து பல இன்னல்களுக்கு ஆளாவார்கள். பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் செல்லும்போதும் சரி, வீடு திரும்பும்போதும் சரி கனமழையில் சிக்கிக்கொண்டால் நிச்சயம் அதோ கதி தான்.

ரெயின்கோட்கள்தான் சிறந்தது

மழை காலத்தில் அனைவரும் கொடையுடன் இருப்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதே நேரத்தில் கனமழை சமயங்களிலும், அதிகம் காற்று வீசும் சமயங்களிலும் கொடை ஓரளவுக்குதான் தாக்குபிடிக்கும். உங்களால் நீண்ட தூரம் கொடையை வைத்துக்கொண்டு செல்ல முடியாது. பைக் ஓட்டும்போது சுத்தமாக உங்களால் கொடையை பயன்படுத்தவே இயலாது. பின்னாடி இருப்பவர் பிடித்தால் கூட காற்றில் கொடை உடைந்துவிடும், உங்கள் இரண்டு பேரில் ஒருவர் கூட நனையாமல் வரமாட்டீர்கள்.

மேலும் படிக்க | மழையில் நனைந்த பிறகு இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!

இந்த சூழ்நிலைகளில் உங்களுக்கு பெரிதும் உதவிக்கரமாக இருப்பவை ரெயின்கோட் தான். உடல் முழுவதையும் கவர் செய்யும் இந்த ரெயின்கோட்களை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் நடந்துசென்றாலும் சரி, பைக்கில் சென்றாலும் சரி எவ்வித சிரமும் இன்றி நீண்ட தூரம் கூட செல்லலாம். மேலும், வீடு திரும்பிய பின்னர் ரெயின்கோட்டை எடுக்கும்போது உங்கள் மீது ஒரு சொட்டு மழைநீர் இருக்காது. ரெயின் கோட்டை உங்களின் தலை முதல் கால் பாதத்திற்கு முன் வரை போட்டு மழைத்து்ககொள்ளலாம். 

இதன்மூலம் உங்களுக்கு மழைக் காலத்தில் பயணித்தாலும் அவதியே இருக்காது. எந்த கவலையைும் இல்லாமல் நீங்கள் வெளியே செல்லலாம். மேலும் அவை விரைவாக காய்ந்தும்விடும். அவற்றை சுருக்கி வைத்துக்கொண்டு உங்களின் பேக்கிலேயே வைத்துக்கொள்ளலாம். எடையும் பெரிதாக இருக்காது. அந்த வகையில், ஆன்லைனில் தரத்துடன் கிடைக்கும் சில ரெயின்கோட்களை இங்கு காணலாம். இவை ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்கும் உள்ளது. 

ஆண்களுக்கு - Zeel JS508 Raincoat

இது அமேசானில் கிடைக்கிறது. இது 5க்கு 4.2 ரேட்டிங்கை பெற்று டாப்பில் உள்ளது. இதன் PVC கோட்டிங் மழைநீர் உங்கள் ஆடைக்கூட தொடாத அளவிற்கு பார்த்துக்கொள்ளும். இதில் வெல்க்ரோ மற்றும் சிப்பருக்கு மேல் சிறு தடுப்பும் இருக்கும். இதனால், தண்ணீர் உள்ளே போகாது. நயிலான, சிந்தெடிக் ஃபைபர் அல்லது பிவிசி ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. 

இதில் பட்டன்கள் மற்றும் சிப்பர் வசதியும் உள்ளது. எனவே இது உங்களுக்கு சௌகரியமாக இருக்கும். நீண்ட வருடங்களுக்கு இதனை நீங்கள் பயன்படுத்தலாம். உட்புறம் பாக்கெட்டும் உள்ளது. பல்வேறு கலர்களிலும் கிடைக்கிறது. இதில் பேண்டும் வந்துவிடும். இதன் விலை 1,549 ஆகும். அமேசானில் இதேபோல், 200 ரூபாய் வரை பல மாடல்களில் ரெயின்கோட் இருந்தாலும் இது சிறந்த ரேட்டிங்கை பெற்றுள்ளது. 

பெண்களுக்கு - Super Women's Reversible Raincoat

இது அமேசானில் கிடைக்கிறது. ரேட்டிங் 4.2 ஆகும். இதில் பேண்ட் வராது. திடமான பாலிஸ்டரில் இரட்டை அடுக்குடன் நீளமான அளவில் இந்த ரெயின்கோட் வரும். காலின் முழுங்கால் வரை இந்த ஒற்றை ரெயின் கோட்டை மறைத்துக்கொள்ளும். ஆனால் இதில் பேண்ட் வராது. 100கிராம்தான் எடை இருக்கும். இதன் விலை ரூ.799 ஆகும். 

ஆண் மற்றும் பெண்களுக்கு - Rocksport Unisex Outdoor Raincoat 

ஆம், இதனை ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவர்களும் பயன்படுத்தலாம். PU கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளதால் ஒரு துளிக்கூட உள்ளே வராது. சீக்கிரமும் காய்ந்துவிடும். 360 கிராம்தான் இருக்கும். நீங்கள் பயணிக்கும்போது இது கைக்கொடுக்கும். அதாவது மழைக்கு மட்டுமின்றி மலையேறும் போதும், காட்டில் முகாமிடும்போதும், வாட்டர் பார்க்குகளுக்கு செல்லும்போதும் இதனை பயன்படுத்தலாம். இதன் ரேட்டிங் 4.0 ஆகும். விலை ரூ.849 ஆகும்.

மேலும் படிக்க | ரஹ்மானுக்கு நடந்தது இளையராஜாவுக்கும் நடக்குமோ...! கான்செர்ட்டுக்கு ஆப்பா? - வெதர்மேன் சொல்வது என்ன?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News