முடிக்கு சாயம் பூசுவதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர், அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலரும் தங்களது தலைமுடிக்கு சாயம் பூசிக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தங்களது தோற்றத்தை மெருகேற்றவும், புதுமையான தோற்றத்தில் தன்னை காட்டும் நோக்கிலும் பலரும் தங்களது முடிக்கு சாயம் பூசுகின்றனர். இதற்காகவே பல விதமான உங்களை கவரும் வகையில் பல வண்ணங்கள் சந்தைகளில் இருக்கின்றன. உங்கள் விருப்பத்திற்கேற்ப தலைமுடியை மாற்ற வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. ஆனால் உங்கள் முடிக்கு சரியான வண்ணம் பூசுவதும் முக்கியம். நீங்கள் உங்கள் முடிக்கு சாயம் பூச எந்த நிறத்தை தேர்வு செய்தாலும், இறுதி தோற்றம் உங்கள் ஹேர்ஸ்டைலை பொறுத்தது.
மேலும் படிக்க | உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும் 5 கெட்ட பழக்கங்கள்!
முடி நிறம் என்பது ஒரு நுணுக்கமான கலையாகும், அதில் திறமையான நபரை தேர்ந்தெடுத்து நீங்கள் பயன்படுத்த வேண்டும். எனவே உங்கள் ஹேர்ஸ்டைல் நிபுணரிடம் இதுவரை அவர்கள் செய்த முடியின் நிறங்களின் படங்களை காண்பிக்க சொல்லி அது சிறப்பாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள். அவர்கள் எந்த நுட்பத்தை பயன்படுத்துவார்கள் என்பதைப் பற்றிய கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டும். லேட்டஸ்ட் ஸ்டைல் ஸ்டேட்மெண்டான ஓம்ப்ரேஜ் ஹேர் கலர் போன்ற டிரெண்டிங் தோற்றத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் முடி நிறத்தை பராமரிக்க சாயம் பூசிய பிறகு அதற்கு பின்னான பராமரிப்பை நீங்கள் முறையாக செய்ய வேண்டும். உங்கள் தலைமுடியை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் மட்டுமே கழுவுங்கள், மிகவும் சூடான நீரில் கழுவினால் உங்கள் முடி பொலிவிழந்துவிடும். மேலும் சல்பேட் இல்லாத முடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசும்போது அதில் சிறப்பாக விளங்கும் நிபுணரிடம் செல்வதே சிறந்தது. பாக்ஸ் டையுடன் ஒப்பிடும்போது சலூன் ஹேர் கலர் ஃபார்முலாக்கள் உங்கள் முடி இழைகளில் குறைவாக முயற்சி செய்கின்றன. வண்ண முடியில் ஸ்ட்ரைட்டனர்கள், கர்லர்கள் அல்லது ப்ளோ-ட்ரையர்கள் போன்ற ஹீட் ஸ்டைலிங் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அல்லது கட்டுப்படுத்தவும். இதன் மூலம் வரும் வெப்பமானது உங்கள் தலைமுடியின் வெளிப்புற பாதுகாப்பு அடுக்கை சீர்குலைத்து, சாயத்தை வெளியேற்றுகிறது. ஹீட் ஸ்டைல் செய்யும்போது, வெப்பப் பாதுகாப்புடன் குறைந்த வெப்ப அமைப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசிய பிறகு, குறைந்தது 72 மணிநேரம் வரை உங்கள் தலைமுடியைக் கழுவாமல் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | அடிக்கடி கண்களில் வலி ஏற்படுகிறதா? இந்த தவறை மட்டும் பண்ணாதிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ