Home Remedies for White Hair : நாம் உண்ணும் உணவைப் பொறுத்து நமது ஆரோக்கியம் மேம்படும். தற்போதைய காலக்கட்டத்தில் ஜங்க் ஃபுட்டை சார்த்து மக்கள் உள்ளனர். ருசியின் காரணமாக இந்த உணவை மக்கள் அதிகம் உட்கொள்கின்றனர். ஆனால் அது நேரடியாக நமது ஆரோக்கியத்தை பாதிக்கும். நாம் உண்ணும் உணவானது நம் கூந்தலிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் முடி உதிர்தல், முன்கூட்டிய நரைத்தல், வறண்ட கூந்தல், பொடுகு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இப்பிரச்னைக்கு தீர்வு பெற நாம் பல்வேறு கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இவை கூந்தலை தற்காலிக தீர்வு தரலாம் ஆனால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதிலிருந்து தீர்வு பெற இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தினால் முடி பிரச்சனைக்கு இயற்கையான தீர்வை பெறலாம்.
முன்கூட்டிய நரை முடிக்கு காரணம் என்ன?
மெலனோ சைட்டுகள் மெலனினை முடியின் தண்டுக்குள் செலுத்தி அதற்கு தனித்துவமான நிறத்தை அளிக்கிறது. மெலனோசைட்டுகள் குறைவாக இருப்பதால் மெலனின் உற்பத்தி குறைவதால் உடல் வயதாகும் போது முடி நரைக்கிறது. முடி தண்டில் மெலனின் மாற்றத்தை ஏற்படுத்தும் போது வெள்ளி மின்னல் போல் நரை முடி உருவாக தொடங்குகிறது.
கூந்தலின் ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை:
மெலனின் மற்றும் புதிய மெலனின் ஆகியவை நம் முடி நிறத்திற்கு காரணம். மெலனின் முடிக்கு கருப்பு நிறத்தை அளிக்கிறது. மெலனின் இல்லாததால், முடி வெள்ளையாக மாறும். அந்தவகையில் கறிவேப்பிலை முடியில் உள்ள மெலனின் குறைபாட்டை நீக்க உதவும். இதனால் கூந்தலை கருமையாக்க கறிவேப்பிலை உதவுகிறது. அதனுடன் கூந்தல் நிபுணர்களின் கூற்றுப்படி, கறிவேப்பிலையில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இதனால் கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதால் கூந்தல் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.
மேலும் படிக்க | சுகர் லெவலை கட்டுப்படுத்த இந்த காய்கறிகளை கண்டிப்பா சாப்பிடுங்க
கூந்தலில் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?:
கறிவேப்பிலையைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம். இதற்கு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், வேப்ப இலை, வைட்டமின் ஈ கேப்சூல்கள் மற்றும் தயிர் தேவைப்படும். முதலில் கறிவேப்பிலை மற்றும் வேப்பிலையை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்துக் கொள்ளவும். பின்னர் இந்த கலவையை சிறிது சூடாக்கவும். ஆறிய பிறகு கறிவேப்பிலை மற்றும் வேப்ப இலை கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது உங்கள் ஹேர் மாஸ்க் தயார்.
கூந்தலில் இதைப் பயன்படுத்துங்கள்:
கூந்தலுக்கு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, தலைமுடியை சரியாகக் கழுவி உலர வைக்கவும். பின் முடி மற்றும் உச்சந்தலையில் தயார் செய்து வைத்துள்ள ஹேர் மாஸ்க்கை தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை மீண்டும் கழுவவும். இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றினால், பலன் கட்டாயம் தெரியும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஜிம், டயட் இல்லாமலும் ஜம்முனு எடையை குறைக்கலாம்: இப்படி பண்ணுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ