பண்டிகை காலம் தொடங்கிவிட்டாலே பல நிறுவங்களும் பல்வேறு விதமான சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் மக்களை கவரும் நோக்கில் பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கிய வருகிறது. அந்த வகையில் பண்டிகை காலம் வரவிருப்பதையொட்டி இப்போது இந்தியாவில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2022 ஆரம்பமாகியுள்ளது. பிரைம் சந்தாதாரர்களுக்காக அமேசான் நவராத்திரி விற்பனை நேற்று முதல் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது, வாடிக்கையாளர்களுக்கு எத்தகைய தள்ளுபடிகள் கிடைக்கப்பெற போகிறது என்பதையும் இந்த ஷாப்பிங் தளம் வெளியிட்டுள்ளது. ஆனுவல் சேல் எப்போது முடிவடையும் என்பது குறித்து அமேசான் தெரிவிக்கவில்லை, அதேசமயம் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2022 கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அமேசான் ஆஃபரில் ரூ.13 ஆயிரத்துக்கு ஐபோன்; வாய்ப்பை தவறவிடாதீங்க மக்களே!
கடந்த ஆண்டு அமேசான் ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் ஐபோன் 12, சாம்சங் கேலக்சி எஸ்20 எஸ்இ, ஒன்ப்ளஸ் 9 ப்ரோ, ரியல்மி ஜிடி மற்றும் பிற ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கியது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப் போலவே ஆப்பிள் ஐபோன் 13, சாம்சங் கேலக்ஸி எஸ் 22+ மற்றும் பிற சாதனங்களுக்கு அமேசான் பல அற்புதமான சலுகைகளை வழங்கவிருக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2022க்கு நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அதாவது இந்த சலுகை கால விற்பனையின்போதும் எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, 10% உடனடி வங்கி தள்ளுபடி மூலம் ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும்.
கடந்த ஆண்டு, அமேசான் பல்வேறு வங்கிகளுடன் தன்னை இணைத்துள்ளது, அதனால் பல வங்கி வாடிக்கையாளர்களும் அமேசானின் இந்த பண்டிகை கால் சலுகையை பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் அமேசான் நிறுவனம் பஜாஜ் ஃபின்சர்வ் கார்டுகளில் எக்ஸ்சேஞ்ச் டீல்கள் மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ ஆகியவற்றையும் வழங்குகிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2022-ன் போது ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ், சியோமி மற்றும் பிற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை வாங்குபவர்கள் 40% வரை தள்ளுபடியைப் வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது ஆப்பிள் ஏர்பாட்ஸ், ஐபேட், ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப் மற்றும் பிற கேஜெட்களுக்கு 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதோடு வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு 65% வரை தள்ளுபடியும் வழங்குகிறது.
மேலும் படிக்க | ஐபோன் 14-க்கு போட்டியாக கூகுள் களமிறக்கப்போகும் ஸ்மார்ட்போன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ