அமேசானில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்!

அமேசானின் ஆம்னி சீரிஸ் ஸ்மார்ட்டிவிகள் 40% வரை தள்ளுபடியுடன் சந்தையில் அறிமுகமாகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2022, 03:38 PM IST
  • அமேசானின் ஆம்னி சீரிஸ் 40% தள்ளுபடி வரை விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
  • ஆப்டிமைஸ்ட் ஃபயர் டிவி ஓஎஸ் பல மூன்றாம் தரப்பு ஸ்மார்ட் டிவிகளிலும் கிடைக்கிறது.
அமேசானில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்! title=

அமேசானின் ஃபயர் டிவி ஆம்னி சீரிஸ் ஸ்மார்ட்டிவிகள் சிறந்த விலை சலுகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது மார்ச் மேட்னஸ் வருவதையொட்டி இவை இன்னும் சிறப்பாக 40% தள்ளுபடி வரை விற்பனை செய்யப்பட இருக்கின்றன.  இந்த டிவியை தேர்ந்தெடுப்பதன் மூலம் அதிக பயன்பாடுகளை பெற முடியும்.  இது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தற்போது சந்தையில் களமிறங்கி இருக்கிறது.  சிறந்த டிவியை குறைந்த விலையில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பபவர்களுக்கு இது ஒரு சிறப்பான தேர்வாகும்.

amazon

மேலும் படிக்க | வெறும் ரூ.190-ல் அட்டகாசமான Vivo T1 5G வாங்க சூப்பர் வாய்ப்பு: அசத்தும் Flipkart விற்பனை

அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் ஃபயர் டிவி கியூப் போன்ற பல்வேறு பிளேயர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.  இந்த நிறுவன டிவிகளில் உள்ள ஆப்டிமைஸ்ட் ஃபயர் டிவி ஓஎஸ் பல மூன்றாம் தரப்பு ஸ்மார்ட் டிவிகளிலும் கிடைக்கிறது.  கடந்த 2021ம் ஆண்டில், அமேசான் அதன் சொந்த பிராண்டட் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியதோடு, ஃபயர் டிவி 4-சீரிஸ் மற்றும் ஆம்னி சீரிஸ் டிவிகளின் மூலம் பல்வேறு செயலிகளை இயக்க கூடுதலாக ஹார்டுவேர் பயன்படுத்தாமல் இருப்பதற்கான வசதியையும் வழங்கியது.

அமேசான் நிறுவனம் ஃபயர் டிவி ஆம்னி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளில் 40% வரை தள்ளுபடி வழங்குவதால் இதனை நீங்கள் தேர்வு செய்வதன் மூலம் அதிக பணத்தை சேமிக்க முடியும்.  அமேசானின் 65-இன்ச் ஆம்னி சீரிஸ் 4கே யுஹெச்டி  ஸ்மார்ட் டிவியில் டால்பி விஷன் மற்றும் அலெக்சாவுடன் இதன் விலை $499.99 ஆக குறைந்துள்ளது.  இதன் ரீடெய்ல் விலை $829.99 என்று கருதினால், இது $330ஐ சேமிக்கிறது.  75-இன்ச் ஆம்னி சீரிஸ் 4கே யுஹெச்டி ஸ்மார்ட் டிவி டால்பி விஷன் மற்றும் அலெக்ஸாவுடன், $1,099.99 லிருந்து $749.99 ஆக குறைந்துள்ளது, இதன் மூலம் 32% சேமிக்கலாம்.  மேலும் இந்த டீல்கள் மார்ச் 31, 2022 வரை மட்டுமே கிடைக்கும்.

Amazon

65 மற்றும் 75 இன்ச் ஓம்னி சீரிஸ் டிவிகள் சிறந்த டீல்கள் என்றாலும், மற்ற மாடல் டிவிகளிலும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.  எடுத்துக்காட்டாக, 55-இன்ச் மாடல் $369.99, 50-இன்ச் டிவி $339.99 மற்றும் 43-இன்ச் பதிப்பு $299.99க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஃபயர் டிவி 4-சீரிஸை வாங்க விரும்புபவர்களுக்கு அமேசான் இந்த மாடல்களிலும் இதே போன்ற தள்ளுபடிகளை வழங்குகிறது.  தற்போது 55-இன்ச் 4-சீரிஸ் ஸ்மார்ட் டிவி $349.99, 50-இன்ச் $319.99 , மேலும் 43-இன்ச் மாடல் $279.99க்கு விற்கப்படுகிறது.  இந்த டீல்கள் அனைத்தும் மார்ச் 31, 2022 வரை இருக்கும்.

மேலும் படிக்க | சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி போன் விரைவில் அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News