Post Office RD Scheme: ரூ.100 போட்டால் போதும், அட்டகாசமான லாபம் காணலாம்

Post Office Recurring Deposit:  தபால் அலுவலகத்தில் ஆர்டி (Post Office RD) இன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் அதை 100 ரூபாய் என்ற குறைந்த தொகை கொண்டும் தொடங்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 17, 2023, 07:10 PM IST
  • அஞ்சல் அலுவலகத்தில் ஆர்டி திட்டம் 5 ஆண்டுகளுக்கு தொடங்கப்படுகிறது,
  • ஒரு முறை திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், நீங்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
  • உதாரணமாக நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.100 அஞ்சலகத்தில் டெபாசிட் செய்தால், நீங்கள் ஆண்டுக்கு ரூ.1200 டெபாசிட் செய்து 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.6000 முதலீடு செய்வீர்கள்.
Post Office RD Scheme: ரூ.100 போட்டால் போதும், அட்டகாசமான லாபம் காணலாம் title=

பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்கள் பெரும்பாலும் எஃப்டி மற்றும் ஆர்டி ஆகியவற்றில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஏனெனில் இந்தத் திட்டங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிலையான வட்டி கிடைக்கும். மொத்தப் பணத்தை எஃப்டி -யில் டெபாசிட் செய்ய முடியாதவர்களுக்கு ஆர்டி ஒரு சிறந்த திட்டமாக இருக்கும். அத்தகைய நபர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை ஆர்டி திட்டத்தில் டெபாசிட் செய்கிறார்கள். இந்த திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் அவர்கள் மொத்தத் தொகையையும் வட்டியுடன் பெறுகிறார்கள். 

வங்கியைத் தவிர, அஞ்சல் அலுவலகத்திலும் ஆர்டி விருப்பம் கிடைக்கின்றது. தபால் அலுவலகத்தில் ஆர்டி (Post Office RD) இன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் அதை 100 ரூபாய் என்ற குறைந்த தொகை கொண்டும் தொடங்கலாம். பணத்தை சேமிக்க முடியாதவர்கள், குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாய் இதில் முதலீடு செய்யலாம். தற்போது, ​​தபால் அலுவலக ஆர்டி -க்கு 6.2 சதவீத வட்டி பெறப்படுகிறது. தபால் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 100 ஆர்டி -யின் வட்டியின் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் டெபாசிட் செய்வதால் கிடைக்கும் லாபம் என்ன? 

அஞ்சல் அலுவலகத்தில் ஆர்டி திட்டம் 5 ஆண்டுகளுக்கு தொடங்கப்படுகிறது, அதாவது ஒரு முறை திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், நீங்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.100 அஞ்சலகத்தில் டெபாசிட் செய்தால், நீங்கள் ஆண்டுக்கு ரூ.1200 டெபாசிட் செய்து 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.6000 முதலீடு செய்வீர்கள். இந்த நிலையில், 6.2 சதவீத வட்டியின் படி, உங்களுக்கு ரூ.1043 வட்டியாக மட்டுமே கிடைக்கும். இதன் படி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.6000. இது வட்டியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.7043 கிடைக்கும்.

மேலும் படிக்க | 7th pay commission: அடி தூள்... 50% டிஏ, அடிப்படை ஊதியத்தில் எக்கச்சக்க ஏற்றம்

அஞ்சல் அலுவலக ஆர்டி திட்டத்தின் நன்மைகள்

- போஸ்ட் ஆபிஸ் ஆர்டி -ஐ வெறும் 100 ரூபாய் முதலீட்டிலும் திறக்கலாம், இது எவரும் எளிதில் சேமிக்கக்கூடிய தொகை ஆகும். இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.

- அஞ்சலக ஆர்டி -இல் கூட்டு வட்டியின் பலனைப் பெறுவீர்கள். வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், வட்டி வடிவத்தில், 5 ஆண்டுகளில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.

- அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டத்தில் ஒருவர் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். இதில், ஒற்றைக் கணக்கு தவிர, 3 பேர் வரை கூட்டுக் கணக்கு தொடங்கலாம். குழந்தையின் பெயரிலும் கணக்கு தொடங்கும் வசதி உள்ளது.

- ஆர்டி கணக்கின் முதிர்வு 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சிக்கு முன்னரும் கணக்கை மூடலாம் (ப்ரீ-மெஸ்யூர் க்ளோசர்). இதில் நாமினேஷன் செய்யும் வசதியும் உள்ளது. அதே நேரத்தில், முதிர்ச்சியடைந்த பிறகு, ஆர்டி கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரவும் செய்யலாம்.

- அஞ்சல் அலுவலக ஆர்டி -இல் கடன் வசதியையும் பெறலாம். 12 தவணைகளை டெபாசிட் செய்த பிறகு, கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50% வரை கடன் பெறலாம்.

மேலும் படிக்க | ரயில்வேயின் அதிரடி சலுகை! ஏசி கோச்சில் இலவசமாக பயணம் செய்யலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News