Indian Railways Fastest Train: நாடு முழுவதும் அதிவேக ரயில்களின் மீதான ஆராய்ச்சி மற்றும் பிற பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. இந்திய ரயில்வே தனது ஒவ்வொரு ரயிலின் வேகத்தையும் அதாவது சாதாரண ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்கும் நோக்கில் இப்போது செயல்பட்டு வருகிறது.
இதற்காக ரயில்வே துறை தற்போது பல புதுமைகளுடன் கூடிய சிறப்பு அதிவேக சோதனை பாதையை உருவாக்கி வருகிறது. இந்த முயற்சியில், கடந்த சில ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய அரசின் இத்தகைய தயாரிப்புகளைத் தவிர, நாட்டின் அதிவேக ரயில்கள் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
வேகமான ரயில்கள்
நாட்டின் பல்வேறு வேகங்களில் ரயில்கள் உள்ளன. மணிக்கு 150 கி.மீ., வேகத்திற்கு வேகமாக ஓடும் ரயில்களும் உள்ளன. இதில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கதிமான் எக்ஸ்பிரஸ் முதல் துரந்தோ எக்ஸ்பிரஸ் வரை அடங்கும்.
வந்தே பாரத்
மேட் இன் இந்தியா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியது, ஆனால் அவை இந்த வேகத்தில் தற்போது இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ரயில் திட்டம் தொடங்கப்பட்டது, இந்த ரயில் நாட்டிலேயே மிகவும் ஹைடெக் ரயிலாக கருதப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி, 2019ஆம் ஆண்டு பிப்.15 அன்று தொடங்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, நாட்டின் தலைநகரான புது டெல்லியை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது.
மேலும் படிக்க | ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பது ஏன் தெரியுமா...?
கதிமான் எக்ஸ்பிரஸ்
இந்தியாவின் அதிவேக ரயில் கதிமான் எக்ஸ்பிரஸ் ஆகும். ரயில் எண்- 12049/12050, ஹஸ்ரத் நிஜாமுதீன் மற்றும் வீராங்கனை லக்ஷ்மிபாய் ஜான்சி ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் கதிமான் எக்ஸ்பிரஸ் தற்போது நாட்டில் வேகமாக ஓடும் ரயிலாகும். கதிமான் எக்ஸ்பிரஸ் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது.
போபால் சதாப்தி
புது டெல்லி - போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் புது தில்லி முதல் போபாலின் ராணி கம்லாபதி ரயில் நிலையம் (ஹபீப்கஞ்ச்) வரை இயக்கப்படுகிறது. கதிமான் எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நாட்டிலேயே அதிவேக ரயிலாக இருந்தது. புது டெல்லி-போபால் சதாப்தியின் வேகம் மணிக்கு 150 கி.மீ என கூறப்படுகிறது.
மும்பை - புது டெல்லி ராஜதானி
புது டெல்லி மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 1972ஆம் ஆண்டு மே 17 அன்று தொடங்கப்பட்டது. தற்போது, அந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கி.மீ., ஆகும். மும்பையில் இருந்து புது டெல்லி வரையிலான தூரத்தை வெறும் 15 மணிநேரத்தில் கடக்கிறது.
புது டெல்லி - ஹவுரா ராஜ்தானி
புது டெல்லி மற்றும் ஹவுரா இடையே ஓடும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 1969ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி தொடங்கப்பட்டது. நாட்டின் முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலும் இதுவாகும். இதன் அதிகபட்ச வேகம் 135 கி.மீ., ஆகும்.
புது டெல்லி - கான்பூர் சதாப்தி
புது டெல்லி - கான்பூர் இடையே ஓடும் சதாப்தி விரைவு வண்டியின் வேகம் மணிக்கு 140 கி.மீ., ஆகும். இந்த ரயில் புது டெல்லிக்கும் கான்பூருக்கும் இடையிலான 445 கி.மீ தூரத்தை 4 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது.
பிகானேர்-சீல்டா துரந்தோ
பிகானேர்-சீல்டா இடையே ஓடும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 135 கி.மீ., ஆகும். இவற்றை தவிர ராஜ்தானி மற்றும் சதாப்தி ஆகியவை 130 கி.மீ., வேகத்தில் ஓடுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ