சிங்கிள்ஸ் கவனத்திற்கு! ஒருதலை பட்சமாக காதலிப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள்!

One Sided Love: ஒரு பெண்ணையோ ஆண்னையோ ஒருதலைப்பட்ச காதலித்தால் மன ஆரோக்கியத்தில் பாதிப்பு மட்டுமில்லாமல், சில உடல் நல பாதிப்புகளும் ஏற்படலாம்.

Written by - RK Spark | Last Updated : Jun 25, 2024, 04:05 PM IST
  • ஒருதலைப்பட்ச காதலால் மன அழுத்தம் ஏற்படலாம்.
  • இதனால் தவறான முடிவுகளை எடுக்க கூடும்.
  • சில உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகிறது.
சிங்கிள்ஸ் கவனத்திற்கு! ஒருதலை பட்சமாக காதலிப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள்! title=

One Sided Love: ஒருதலைப்பட்ச காதல் பற்றி அனைத்து மொழிகளிலும் நிறைய படங்கள் வெளியாகி உள்ளன. உண்மையில் ஒரு பெண்ணையோ அல்லது ஆண்னையோ ஒருதலை பட்சமாக காதலிப்பதால் மன ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல், சில உடல் நல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. இதனை தெரிந்து கொண்டு சரிசெய்யவில்லை என்றால், அது உங்கள் காதல் உறவையும் பாதிக்கும். அதே சமயம் எதிர்காலத்தில் உங்கள் உடல் நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நான் சிங்கிள் என்று கெத்தாக சுற்றி கொண்டு இருக்கும் பலருக்கும் நிச்சயம் காதல் தோல்வி இருக்கும் அல்லது தங்கள் காதலை வெளிப்படுத்த முடியாமல் இப்படி சொல்வதும் உண்டு.

மேலும் படிக்க | அரேஞ்ச் மேரேஜ் பண்ண போறீங்களா... திருமணத்திற்கு முன் பார்ட்னரிடம் கேட்க வேண்டிய 4 கேள்விகள்!

ஒரு உறவில் இருவரும் சமமாக ஒருவருக்கொருவர் அன்பையும் ஆதரவையும் வழங்கும்போதும் அந்த உறவு நீண்ட நாட்களுக்கு நிலைத்து இருக்கிறது. இதன் மூலம் வரும் மனதளவில் நிம்மதியாக இருப்பதால் உடல் நிலையில் பெரிதாக பாதிப்புகள் வருவதில்லை. இந்நிலையில், ஒருதலை பட்சமாக காதலிக்கும் அல்லது பாசத்தை வெளிப்படுத்தும் நபர் மனதளவில் துன்பத்தை அனுபவிக்கலாம். இதனால் கவலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் அதிகரித்து நேர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். காதலில் மட்டும் இன்றி குடும்பம் மற்றும் நட்பு உறவுகளுடன் போதுமான ஆதரவைப் பெறாத போது இது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.

மன அழுத்தம்: ஒருதலைப்பட்ச காதல் நிராகரிக்கப்படும் போது மனச்சோர்வு ஏற்படுகிறது. மேலும் அந்த விஷயத்தை பற்றி சிந்தித்து கொண்டே இருக்கும் போது அது மன அழுத்தமாக மாறுகிறது. ஒரு நபர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தால் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும்.

கவலை: ஒருதலைப்பட்சமான காதல் பயம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும். காதல் நிராகரிப்பு ஏற்பட்டால், இதன் காரணமாக அவர்களின் எதிர்காலத்தை பற்றி யோசித்து பதட்டமாகின்றனர். மேலும் உறவுகளின் மீது வெறுப்பும், அவநம்பிக்கையும் ஏற்படுகிறது.

சுயமரியாதை: ஒருதலைப்பட்ச காதல் உங்கள் சுயமரியாதையையும் கெடுக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆணோ பெண்ணோ தங்களை குறைவாக மதிப்பிடத் தொடங்குகிறார்கள். இது அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது.

எதிர்மறை சிந்தனை: சில சமயத்தில் ஒருதலைப்பட்ச காதலில் ஏமாற்றம் அடையும் போது, மிகவும் அவநம்பிக்கையானவராக உணர்கின்றனர். அந்த நபருக்குள் எதிர்மறை உணர்வுகள் உருவாகின்றன. மேலும் சில சமயங்களில் சரி மற்றும் தவறுகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் ஆபத்தான சூழ்நிலைகளில் மாட்டிக்கொள்கின்றனர்.

மேலும் படிக்க | வாழ்க்கையில் ‘இந்த’ வகை நபர்களுக்கு அறிவுரை சொல்லாம இருக்கிறது நல்லது..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News