ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே இதனை அப்டேட் பண்ணுங்க! பணம் இழக்கும் அபாயம்!

OTP அங்கீகாரம் இல்லாமலேயே உங்கள் கணக்கை ஹேக் செய்வதற்கான புதிய வழியை மோடி கும்பல் கண்டறிந்துள்ளனர். எனவே மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Oct 18, 2023, 06:25 AM IST
  • AePS கட்டண முறையில் மிகப்பெரிய குளறுபடி.
  • மோசடி செய்பவர்களுக்கு ஈசியாக உள்ளது.
  • வங்கி கணக்கிலிருந்தும் பணத்தைத் திருட வாய்ப்பு.
ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே இதனை அப்டேட் பண்ணுங்க! பணம் இழக்கும் அபாயம்! title=

நிதி மோசடி மற்றும் அடையாள திருட்டு அதிகமாக இருக்கும் இந்த காலத்தில், உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் பணத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது. ஆதார் கார்ட் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்கள் பணத்தை பாதுகாக்க ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் உங்கள் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தாலும் கூட, நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும். ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறையால் (AEPS) ஆதார் அட்டை உள்ளவர்கள் ஆயிரக்கணக்கான பணத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் OTPகள் உள்ளிட்ட பல சரிபார்ப்புகள் தேவைப்படும் பிற ஆன்லைன் சேவைகளைப் போலன்றி, AEPS அமைப்பு ஒரு தனித்துவமான அம்சத்துடன் வருகிறது.

மேலும் படிக்க | ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றங்கள்! உலோகன்னாலும் தங்கம் இல்லையா

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் OTP தேவையில்லை. இதற்கு ஆதார் எண், கைரேகை, OTP மற்றும் கருவிழி ஆகியவை தேவை. இரண்டாம் நிலை சரிபார்ப்பு இல்லாததால், அங்கீகரிக்கப்படாத நிதி பரிவர்த்தனைகளுக்கு வழிவகுக்கும் பாதிப்புகளுக்கு தள்ளப்படுகிறது.  இந்த அமைப்பினால் ரூ.10,000 இழந்ததை அடுத்து ஒரு பயனர் இதை பற்றி தெரிவித்துள்ளார்.  ஒரு பரிவர்த்தனையை அங்கீகரிக்க தனது ஆதார் பயன்படுத்தப்பட்டதாக வங்கியில் இருந்து தனக்கு செய்தி வந்ததாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். எனவே, இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் மொபைல் செயலியான mAadhaar செயலி மூலம் உங்கள் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக்கை இயக்குவது நல்லது. இதைச் செய்வதன் மூலம், உங்கள் ஆதார் விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. குறிப்பாக பயோமெட்ரிக் தரவில், உங்கள் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவை அடங்கும். ஒரு கிளிக்கில் பல பணிகளைச் செய்ய தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கும் உலகில், AEPS வழங்கும் வசதி மறுக்க முடியாதது. இருப்பினும், இந்த வசதியே உங்கள் நிதிப் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி:

  • மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க, mAadhaar ஆப் அல்லது UIDAI இணையதளத்தைப் பயன்படுத்தி உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தரவைப் லாக் செய்ய வேண்டும்.
  • உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவைப் லாக் செய்து, mAadhaar ஆப்பை பதிவிறக்கி, பதிவு செய்ய உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் ஆதார் விவரங்களைச் சரிபார்த்து, ஆப்பை பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக்கைப் லாக் செய்யவும். உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் ஆப்பை பயன்படுத்தி பயோமெட்ரிக்ஸைத் பயன்படுத்தலாம்.

ஆதார் கார்டில் பயனர்கள் பணத்தை இழப்பதைத் தவிர்க்க:

- கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து mAadhaar செயலியைப் பதிவிறக்கவும்.

- ஆப்பில் "எனது ஆதார் பதிவு" பட்டனைத் கிளிக் செய்யவும்.

- இப்போது, ​​ஆப்பிள் 4 இலக்க கடவுச்சொல்லை உள்ளிடவும்.

- நீங்கள் இப்போது ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு கேப்ட்சாவை உள்ளிடனும்.

- இதற்குப் பிறகு, நீங்கள் OTP ஐக் கொடுக்க வேண்டும். இது உங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். 

- OTP ஐ உள்ளிட்ட பிறகு, உங்கள் ஆதார் கணக்கு திறக்கப்படும். கீழே ஸ்க்ரோல் செய்து "பயோமெட்ரிக்ஸ் லாக்" என்பதைத் கிளிக் செய்யவும்.

- நீங்கள் மீண்டும் பாதுகாப்பு கேப்ட்சாவை உள்ளிட வேண்டும், பின்னர் OTP ஐ உறுதிப்படுத்த வேண்டும்.

- நீங்கள் OTP ஐச் சரிபார்த்தவுடன், உங்கள் பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்படும்.

மேலும் படிக்க | முழு ரயிலையும் உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு புக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News