அட்சய திருதியை: இந்த 4 வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்

இந்த நாளில் மக்கள் தங்கம் வாங்க விரும்புவார்கள். அதன்படி நீங்களும் இன்று தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், உங்களுக்காக சில சிறந்த விருப்பங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 3, 2022, 11:03 AM IST
  • அட்சய திருதியை நாள் மங்களகரமானதாக கருதப்படுகிறது
  • தங்கத்தில் முதலீடு செய்ய அட்சய திருதியை ஒரு நல்ல நாள்
  • ஆண்டு முழுவதும் செல்வம் செழிக்கும்
அட்சய திருதியை: இந்த 4 வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் title=

ஒவ்வொரு ஆண்டின் மிகவும் மங்களகரமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படும் அட்சய திருதியை, இந்தியாவில் மே 3ம் தேதி அதாவது இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்ய அட்சய திருதியை ஒரு நல்ல நாளாக மக்கள் கருதுகின்றனர். மேலும் இப்படி செய்வதால் ஆண்டு முழுவதும் செல்வம் செழிக்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

ஷாப்பிங் முதல் திருமணம் வரை எந்த ஒரு புதிய தொடக்கத்திற்கும் அட்சய திருதியை நாள் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தங்கம் வாங்க விரும்புவார்கள். நீங்களும் இன்று தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், உங்களுக்காக சில சிறந்த விருப்பங்களைக் கொண்டு வந்துள்ளோம். இந்த அட்சய திருதியை அன்று தங்கத்தில் எப்படி முதலீடு செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு அட்சய திரிதியை மிகவும் உகந்தது

1. ரொக்க தங்கம்
தங்கத்தை வைத்திருப்பதற்கு மிகவும் விருப்பமான வழி, ரொக்க தங்கம் அல்லது நகைகள் அல்லது தங்க நாணயங்கள் போன்ற வடிவங்களில் உள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் நகைக்கடைக்கு சென்று தங்கத்தை வாங்க விரும்புகிறார்கள்.

2. இறையாண்மை தங்கப் பத்திரங்கள்
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இறையாண்மை தங்கப் பத்திரங்கள் சிறந்த வழி. தங்கப் பத்திரங்கள் மூலம் ஒருவர் செல்வ வளர்ச்சியை அனுபவிக்க முடியும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் வட்டியையும் பெறலாம். இறையாண்மை தங்கப் பத்திரங்கள் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்படுகின்றன, மேலும் இதில் எந்த ஆபத்தும் இல்லை.

3. தங்க ஈடிஎஃப்
தங்க ஈ.டி.எப் என்பது உள்நாட்டு பொருட் தங்க விலையை கண்காணிக்க திட்டமிட்டுள்ள ஒரு பங்குச் சந்தை வர்த்தக நிதியாகும். தங்க ஈ.டி.எப் என்பது ஆவணம் அல்லது பொருளற்ற வடிவிலுள்ள பொருள் சார்ந்த தங்கத்தை குறிக்கிறது. ஒரு தங்க ஈ.டி.எப் அலகு என்பது 1 கிராம் தங்கத்திற்கு சமமாகும் மற்றும் மிக உயர்ந்த தூய்மையான பொருள்சார்ந்த தங்கத்தினால் செய்யப்படுகிறது. ஏராளமான மக்கள் தங்க பத்திரங்கள் மற்றும் காகித வடிவில் கிடைக்கும் தங்க ஈ.டி.எப்களை வாங்குகின்றனர்.

4. கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்
கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்கத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலீடு செய்யும் கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும். முதலீட்டாளர்கள் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2022: செல்வ செழிப்பில் மிதக்க போகும் 6 ராசிக்காரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News