ATF விலை உயர்வால் இனி விமான கட்டணமும் உயரும்; அதிர்ச்சியில் பயணிகள்

விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக, விமான எரிபொருள் அல்லது ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) விலை அதிகரித்துள்ளது. விமானத்தில் பயன்படுத்தும் எரிபொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 5 சதவீதம் உயர்த்தியுள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 16, 2022, 11:21 AM IST
  • விமான எரிபொருளின் விலைகள் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் மாற்றியமைக்கப்படுகின்றன.
  • 2022 ஆம் ஆண்டில் 10வது முறையாக விலை அதிகரித்துள்ளது.
  • உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது
ATF விலை உயர்வால் இனி விமான கட்டணமும் உயரும்; அதிர்ச்சியில் பயணிகள் title=

ஏர் டர்பைன் எரிபொருள் அல்லது ஜெட் எரிபொருள் விலை உயர்வின் காரணமாக, இனி விமான கட்டணமும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. விமான எரிபொருளின் விலையை அதிகரிக்க அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள் இன்று மீண்டும் தீர்மானித்துள்ளன. ஏர் டர்பைன் எரிபொருள் 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், விமான எரிபொருளின் விலை வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டில், விமான எரிபொருளின் விலை 10 வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

5 சதவீதம் அதிகரிப்பு 

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக விமான எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் தேசிய தலைநகரில் ATF விலையை 5 சதவீதம் உயர்த்தியுள்ளன. தலைநகரில்ஜெட் எரிபொருளின் விலை கிலோலிட்டருக்கு ரூ.123,039.71ஐ என்ற அலவை ட்டியுள்ளது, அதாவது (ஒரு லிட்டர் ரூ.123).

ATF விலைகள் 15 நாட்களுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்யப்படும்

ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் விமான எரிபொருளின் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பாய்வு செய்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், ஜெட் எரிபொருள் விலை 62 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க | சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: சென்னை - சிங்கப்பூர் வழிதடத்தில் சூடுபிடிக்கும் டிக்கெட் முன்பதிவு

கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை விலை நிலவரம்

மும்பையில் ATF இன் விலை தற்போது ஒரு கிலோ லிட்டர் ரூ.121,847.11 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் ரூ.127,854.60 ஆகவும், சென்னையில் ஒரு கிலோ லிட்டர் ரூ.127,286 ஆகவும் உள்ளது.

ஜெட் எரிபொருள் விலை உயர்வு விமானத் தொழிலை பாதிக்கும்

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, கடந்த நான்கு மாதங்களில் விமான எரிபொருளின் விலையில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தக் கூடும்.

இதனால், விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறையக் கூடும். தற்போது விமான போக்குவரத்து துறை, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், ஏடிஎஃப் விலை உயர்வு, விமானப் போக்குவரத்துத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ரேட்டிங் ஏஜென்சியான ஐசிஆர்ஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | LPG Cylinder Price: எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.250 அதிகரித்தது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News