குங்குமப்பூவில் கலப்படம் உள்ளதை அடையாளம் காண்பது எப்படி!

குங்குமப்பூவில் கலப்படம் இருந்தால், உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும். எனவே உண்மையான குங்குமப்பூவிற்கும் போலி குங்குமப்பூவிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது அவசியம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2022, 09:18 PM IST
  • போலி குங்குமப்பூ சந்தையில் அதிகம் விற்கப்படுகிறது.
  • ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பு.
  • உண்மையான மற்றும் போலி குங்குமப்பூவை எவ்வாறு அடையாளம் காண்பது
குங்குமப்பூவில் கலப்படம்  உள்ளதை அடையாளம் காண்பது எப்படி! title=

அனைத்து மசாலாப் பொருட்களின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது. குங்குமப்பூ உலகின் விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகும்,. மற்ற பொருட்கலை போலவே, சந்தையில் போலி குங்குமப்பூவும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் உண்மையான குங்குமபூவை அடையாளம் காண்பது சற்று கடினம். 

குங்குமப்பூவில் உள்ள பண்புகள் உடலை சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பல கடுமையான நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் செய்கின்றன. 

இந்தியாவில், காஷ்மீரில் குங்குமப்பூ அதிகம் பயிரிடப்படுகிறது. குங்குமப்பூ விலை உயர்ந்தது என்பதோடு மிகவும் பயனுள்ளது, எனவே குங்குமப்பூ மிகவும் விலை உயர்ந்தது என்பதால், அதிக லாபம் பெற அதில் கலப்படம் செய்கிறார்கள். கலப்படம் செய்யப்பட்ட குங்குமப்பூ நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே உண்மையான மற்றும் போலி குங்குமப்பூவை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை அறிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | புதினாவில் மறைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள் 

உண்மையான மற்றும் போலி குங்குமப்பூவை அடையாளம் காண்பது கடினமான பணியாகும். பெரும்பாலான மக்கள் கலப்படத்திற்கு பலியாவதற்கு இதுவே காரணம். குங்குமப்பூவில் கலப்படத்திற்காக மக்கள் சோள முடியைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். இதனை உட்கொள்வது வயிற்றில் கோளாறு, வாயு மற்றும் வீக்கம் உண்டாக்கும்.  எனவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  #DetectingFoodAdulterants எனப்படும் மசாலா மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டறியும் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

குங்குமப்பூவில் கலப்படத்தைக் கண்டறிய, ஒரு கிளாஸை எடுத்து, அதில் 70 முதல் 80 டிகிரி வரை சூடாக்கப்பட்ட தண்ணீரைச் சேர்க்கவும். பிறகு அதில் சில குங்குமப்பூ இதழ்களை வைக்கவும். உங்கள் குங்குமப்பூ உண்மையானது என்றால், தண்ணீரில் குங்குமப்பூவின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். கலப்படம் என்றால் உடனே மறைந்து விடும்

சந்தையில் குங்குமப்பூவை வாங்கும் முன், குங்குமப்பூவை ருசித்து அதன் சுவையால் அடையாளம் காணவும். இதற்கு முதலில் இரண்டு குங்குமப்பூவை நாக்கில் வைத்து லேசாக மென்று சாப்பிடுங்கள். குங்குமப்பூவின் சுவை மிகவும் இனிமையாக இருப்பதாக நீங்கள் கண்டால், உங்கள் குங்குமப்பூ போலியானது என்று அர்த்தம். குங்குமப்பூவின் வாசனை இனிமையாக இருக்கலாம் ஆனால் அதன் சுவை லேசான கசப்பாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News