Actress Simran Weight Loss Tips : தமிழ் திரையுலகில் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் சிம்ரன். இவர், ரசிகர்களை பெருமளவிள் ஈர்ப்பத்கு காரணமாக இருந்தது, இவரது இடையழகும், மென்மையான சிரிப்பும், இதழோரத்தில் இருக்கும் குட்டி மச்சமும்தான். திரையுலகில் ஆக்டிவாக இருந்த வரை, இவருக்கு எக்கச்சக்கமான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இவர் குடும்பத்துடன் செட்டில் ஆனவுடன், சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இப்போது துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
எடை கூடிய சிம்ரன்:
பொதுவாகவே, பெண்கள் திருமணம் ஆன பிறகும், குழந்தை பிறந்த பிறகும் உடை கூடத்தான் செய்வர். நடிகை சிம்ரனிற்கு மொத்தம் 2 குழந்தைகள் இருக்கின்றனர். முதல் குழந்தை பிறந்த பின்பு 30 கிலோ அதிகமான இவர், பின்னர் சீக்கிரமாகவே எடையை குறைத்திருக்கிறார். ஆனால், இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு அவருக்கு 35 கிலோ எடை அதிகரித்து விட்டதாம். இதை எப்படி குறைத்தார் என்பதையும், தனக்கு உதவிய சில டிப்ஸ்கள் குறித்தும் சிம்ரன் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.
யோகா:
யோகா, அனைவரின் வாழ்வையும் மாற்றக்கூடிய அற்புத மந்திரம் கொண்டிருக்கிறது என நாம் பிறர் கூற கேட்டிருப்போம். இது உண்மைதான் என நம்மை ஒப்புக்கொள்ள வைக்கிறது, சிம்ரனின் அனுபவம். இவர், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக யோகா செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
தியானம்:
தியான பயிற்சி நம் மனதை மட்டுமன்றி உடலையும் சாந்தப்படுத்த உதவுமாம். தினமும் 5-10 நிமிடங்கள் தியானம் செய்வதையும் சிம்ரன் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால், உடலில் உள்ள தசைகள் தளர்ந்து எடை குறைய வழி வகுக்குமாம்.
ஒழுக்கமான சாப்பாடு மற்றும் டயட்:
நாம் சாப்பிடும் உணவுகள், நமது உடல் எடை அதிகரிப்பதிலும் குறைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. நாம், ஒழுக்கம் இல்லாமல் உணவுகளை சாப்பிடுவதால் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறும் சிம்ரன், தான் சரியான டயட்டை கடைப்பிடிப்பதாக கூறுகிறார். காலையில் 9 மணிக்குள் பிரேக்-ஃபாஸ்ட் சாப்பிடும் இவர் மதிய உணவையும் சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்வதாகவும், இரவில் டின்னரை 8:30 மணிக்குள் சாப்பிட்டு விடுவதாக கூறியிருக்கிறார். அதன் பிறகு எந்த நொருக்குத்தீனி சாப்பிடுவதையும் கூட அவர் தவிர்த்து விடுவாராம்.
வர்க்-அவுட்:
தினமும் ஜிம் செல்ல மறவாதவர்களுள் ஒருவர், சிம்ரன். ஒரு சில நாட்கள் ஜிம் செல்ல தவறினாலும் அதை பின்னர் கேட்ச்-அப் செய்து கொள்வதாக கூறுகிறார். மேலும், 1 முதல் 2 மணி நேரம் வரை ஜிம்மில் வர்க்-அவுட் செய்வது நல்லது என்றும் அவர் கூறுகிறார். ட்ரெட்மில்லில் வாக்கிங் செய்வது, வெயிட் லிஃப்டிங் செய்வது இவருக்கு பிடித்த பயிற்சிகளுள் அடங்கியிருக்கிறது. அனைவரும், ஃபிட்டாக இருக்க தொடர்ந்து ஜிம் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இடை அழகிற்கான ரகசியம்:
சிம்ரன், தனது 48வது வயதிலும் இன்னும் எடையையும், இடையையும் சரியாக மெயிண்டெயின் செய்து வருகிறார். இதை இன்றளவும் அவர் மெயிண்டெயின் செய்ய காரணம், தான் ட்விஸ்ட் உடற்பயிற்சிகளை செய்வதுதான் என்று கூறியிருக்கிறார். நாள் ஒன்றுக்கு 150 முறை இந்த ட்விஸ்ட் உடற்பயிற்சியை அவர் செய்வாராம். இதை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் கண்டிப்பாக இடை அப்படியே அழகாக இருக்கும் என சிம்ரன் உள்பட பலர் நம்புகின்றனர்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ