வெயிட் லாஸ் செய்ய சமந்தா இரவில் ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?

Actress Samantha Diet Weight Loss Tips : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா, தன் எடையை மெயின்டெயின் செய்ய என்ன செய்வார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Oct 8, 2024, 05:04 PM IST
  • சமந்தாவின் வெயிட் லாஸ் டிப்ஸ்
  • தினமும் இரவில் சாப்பிடும் விஷயம்
  • என்ன தெரியுமா?
வெயிட் லாஸ் செய்ய சமந்தா இரவில் ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா? title=

Actress Samantha Diet Weight Loss Tips : இந்திய அளவில், மிகவும் பிரபலமாக இருக்கும் கதாநாயகிகளுள் ஒருவராக விளங்குகிறார் சமந்தா. தெலுங்கு பெண்ணாக இருந்தாலும் சென்னை-பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த இவர், கடந்த 13 வருட திரை வாழ்க்கையில் அசுர வளர்ச்சி கண்ட கதாநாயகியாக இருக்கிறார். 37 வயதாகும் இவர், தினசரி உடற்பயிற்சி செய்து, உடல் எடையை சரியாக பராமரித்து, ஸ்லிம் ஆன உடற்கட்டுடன் வலம் வருகிறார். வெயிட் கொஞ்சம் ஏறி விட்டாலும் சமந்தா அதை எப்படியேனும் குறைத்து விடுவாராம். அவருடைய டயட், உடற்பயிற்சிகள், விரும்பி சாப்பிடும் உணவு ஆகியவை குறித்து இங்கு பார்க்கலாமா? 

வர்க் அவுட்:

உடல் எடையை சரியாக பராமரிக்க, எடை ஏறாமல் பார்த்துக்கொள்ள, தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம் ஆகும். சமந்தாவும், தனது உடற்பயிற்சிகளை ஒரு நாளும் விட்டுக்கொடுக்காதவராக இருக்கிறார். கார்டியோ மற்றும் ஸ்ட்ரெந்த் டிரைனிங் உடற்பயிற்சிகளை ஒன்றாக செய்வதால் அவரது உடல் மெருகேறியும், ஆரோக்கியமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. 

சைக்ளிங், ரன்னிங் செல்வதற்கு தவறாதவர் சமந்தா. மேலும் அவற்றை செய்யாத நாட்களில் வெயிட் லிஃப்டிங், யோகா, பிலாடீஸ் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்கிறார். இது, அவரது உடல், அனைத்து தருணங்களிலும் ஃப்ளெக்ஸிபில் ஆக இருக்க உதவுவதாக கூறப்படுகிறது. 

காலை உணவு:

உடல் எடையை சரியாக பராமரிக்க, ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து சரியான உணவுகளை அனைத்து வேலைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை அப்படியே பின்பற்றுகிறார் சமந்தா. அசைவ உணவுகளை சமந்தா சாப்பிடாததால், தனது டயட்டில் அதிகளவு காய்கறிகளை சேர்த்துக்கொள்கிறார். காலையில் ஒரு கிண்ணம் பழம் சாப்பிடும் இவர், கூடவே ஓட்ஸ் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறார். உலர் பழங்களும் எப்போதாவது சேர்த்துக்கொள்வாராம்.

மதிய உணவு:

சமந்தா, மதியத்தில் ஒரு கிண்ணம் அளவிற்கு பிரவுன் அரிசி எடுத்துக்கொள்வாராம். அவற்றுடன் குறைவாக எண்ணெய் சேர்க்கப்பட்ட குழம்பு மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறார். இவர் பெரும்பாலும் சாப்பிடும் உணவுகள்: ரசம், சாம்பார், பருப்பு தால் ஆகியவைதானாம். இவற்றையும், சிறு சிறு அளவுகளிலேயே அவர் எடுத்துக்கொள்வாராம். 

மாலை சிற்றுண்டி:

சமந்தா மாலை நேரங்களில் தவறாமல் ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறாராம். பெரும்பாலும் கிரீன் டீ மற்றும் ஸ்மூதி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும் இவர், அதில் சர்க்கரை சேர்க்காமல் அல்லது குறைவாக சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..

இரவு உணவு:

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், பெரும்பாலும் அந்த உணவின் அளவை குறைவாகவே எடுத்துக்கொள்வர். அதையே சமந்தாவும் பின்பற்றுகிறார். இவருக்கு காய்கறி மிகவும் பிடிக்கும் என்பதால் சூடான வெஜ் சூப் குடிப்பாராம். அதனுடன் குயினாவோ ஒரு கிண்ணம் வைத்து சாப்பிடுவாராம். மேலும், அவர் 8 மணிக்குள்ளாகவே தனது டின்னரையும் முடித்துக்கொள்வார் என கூறப்படுகிறது.

Samantha

டயட் இல்லாத நாட்கள்:

சமந்தாவால், அனைத்து நாட்களிலும் டயட்டை ஃபாலோ செய்ய முடியாதாம். இதனால் 80/20 ரூல்ஸை இவர் ஃபாலோ செய்கிறார். அப்படியென்றால், 80 சதவிகிதம் ஹெல்தியான டயட் உணவுகளை எடுத்துக்கொள்ளும் இவர், மீதி 20 சதவிகிதம் தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுகிறாராம். இவருக்கு ரொம்ப பிடித்தது பிரியாணி என கூறப்படுகிறது.

சரும பராமரிப்பு:

சமந்தா, தனது சருமத்தை பராமரிக்கவும் பிரதேயக முயற்சிகளை எடுத்துக்கொள்கிறார். அதில் அவர் தினசரி செய்யும் சிம்பிளான பழக்கம், நன்றாக தண்ணீர் குடிப்பதுதான். இது, இவரது சருமத்தையும் உடலையும் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறதாம். 

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News