நிறைய சாப்பிட்டும் ஒல்லியாக ‘இதை’ பண்ணனும்! பிரியா பவானி சங்கரின் வெயிட் லாஸ் சீக்ரெட்..

Priya Bhavani Shankar Weight Loss Secret Tips : பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், சில நாட்களுக்கு முன்பு தனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அது குறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 16, 2024, 06:02 PM IST
  • பிரியா பவானி சங்கர் வெயிட் லாஸ் டிப்ஸ்
  • நல்லா சாப்பிடுவாராம்
  • ஆனால் எடை குறைப்பாராம்! எப்படி?
நிறைய சாப்பிட்டும் ஒல்லியாக ‘இதை’ பண்ணனும்! பிரியா பவானி சங்கரின் வெயிட் லாஸ் சீக்ரெட்.. title=

Priya Bhavani Shankar Weight Loss Secret Tips : தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகையாக வலம் வருபவர், பிரியா பவானி சங்கர். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பின்னர் “கல்யாணம் முதல் காதல் வரை” தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர் அவரை பல லட்சம் பேருக்கு அறிமுகம் செய்து வைத்தது. இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே அவர் படங்களில் கமிட் ஆக ஆரம்பித்தார். அதில் சில படங்கள் ஹிட் அடிக்க, சில படங்கள் தோல்வியுற்றன. பிரியா பவானி சங்கர், மிகவும் ஒல்லியாகவும் இல்லாத, உடல் பருமனுடனும் இல்லாத நடிகைகளுள் ஒருவராவார். இவர், தனது டயட் குறித்தும், ஒல்லியாக இருப்பது குறித்தும் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். 

நல்லா சாப்பிடலாம்..

நம் கூடவே பழகும் ஒரு சில பேர் கூட, நன்றாக சாப்பிட்டும் சதைப்பிடிக்காத மனிதர்களாக இருப்பர். ஆனால், எந்தவித துரித உணவுகளும் சாப்பிடாமல் கோடு போட்டு வாழும் மனிதர்கள் பலர், உடல் பருமனுடன் காட்சியளிப்பர். இதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கிறது. உடல் எடை அதிகரிப்பது குறித்து பேசும் பிரியா பவானி சங்கர், தான் “சம்பாதிப்பதே சாப்பிடுவதற்குதான்” எனும் லாஜிக்கை பின்பற்றி வாழ்பவர் என்று கூறுகிறார். 

மேலும் படிக்க  | டயட் இல்லாமல் எடையை குறைத்த ஸ்ருதிஹாசன்! சீக்ரெட் என்ன? ரொம்ப சிம்பிள்!!

பெண் என்றால் ஒல்லியாக அழகாக இருக்க வேண்டும் என்று கூறுவதில் தனக்கு துளியும் நம்பிக்கை இல்லை என்று கூறும் அவர், “அவரவர் கண்களுக்கு அவரவர் அழகாக தெரிந்தால் போதும்” என்கிறார். 

ஒல்லியாக இருக்க..

நாம், தினசரி எழுந்து உடற்பயிற்சி செய்தாலே நம் உடல் எடை குறையும் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். அதன் கூடவே சேர்ந்து டயட்டும் இருந்தால் எடை நன்றாகவே குறையும். ஃபிட்னஸை பராமறிப்பது குறித்து பேசும் பிரியா பவானி சங்கர், எந்த அளவிற்கு சாப்பிடுகிறாரோ அதே அளவிற்கு வர்க்-அவுட்டும் செய்வாராம். தினமும் ஜிம்மில் ஒரு மணி நேரம் வரை செலவிடும் அவர் அந்த நேரத்தில் கண்டிப்பாக கார்டியோ மற்றும் ஃப்ளோர் உடற்பயிற்சிகள் இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும், ஸ்ட்ரெந்த் எக்சர்சைஸையும் நிச்சயமாக செய்வாராம். 

டயட்…

ஆரோக்கியமாக சாப்பிடுகிறோமா, இல்லையா என்பது கவனத்தில் இருக்க வேண்டுமே தவிர, ‘டயட்’ என்ற பெயில் வயிற்றை காயப்போடுவது பிரியாவிற்கு பிடிக்காதாம். தான் வெளியூருக்கு பயணம் செய்கையில், வெஜிடேரியன் உணவுகளை மட்டும் நிறைய சாப்பிடுவாராம். வீட்டில் இருக்கும் போது அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் இவருக்கு, பாசுமதி அரிசியில் செய்த செட்டிநாடு மட்டன் பிரியாணி ரொம்ப பிடிக்குமாம். அதே போல, தன் உணவில் அதிகமாக காய்கறி சேர்த்துக்கொள்வதும் இவரது ஃபிட்னஸ் சீக்ரெட்டாக இருக்கிறது. 

ட்ரிப் செல்கையில்..

உள்ளூரில் இருக்கும் போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர், வெளியூர் செல்கையில் ட்ரக்கிங் செல்வதை பழக்கமாக வைத்திருக்கிறார். மேலும், 7 கி.மீ தூரத்திற்கு சைக்கிளிலேயே பயணம் செய்வதும் இவருக்கு பிடித்த பழக்கமாம். அதே போல, நெடுந்தூரம் நடந்து செல்வதையும் இவர் விரும்புவாராம். 

மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News