உங்கள் வீட்டில் அதிக நேரம் ஏசி ஓடுகிறதா? வெடிக்காமல் இருக்க இவற்றை பின்பற்றுங்கள்!

தற்போது கோடை காலத்தில் இரவு மற்றும் பகலில் அதிக நேரம் ஏசி பயன்பாட்டில் உள்ளது. இது போன்ற சமயங்களில் ஏசி ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க சிலவற்றை பின்பற்ற வேண்டும்.   

Written by - RK Spark | Last Updated : Jun 22, 2024, 08:04 AM IST
  • அதிகரித்து வரும் வெப்பநிலை.
  • பலரும் ஏசி பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
  • ஏசியை நன்கு பராமரிப்பது அவசியம்.
உங்கள் வீட்டில் அதிக நேரம் ஏசி ஓடுகிறதா? வெடிக்காமல் இருக்க இவற்றை பின்பற்றுங்கள்! title=

தற்போது கோடை வெயில் பலரையும் சுட்டெரித்து வருகிறது. இந்த கடுமையான வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை போன்ற இடங்களில் வெப்பநிலை 50 டிகிரியை தாண்டியுள்ளது. இந்த வெயிலினால் பலருக்கும் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களும் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டு கொண்டுள்ளனர். என்னதான் பேன் மற்றும் ஏர் கூலர் இருந்தாலும் வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி தேவைப்படுகிறது. அதிகரித்து வரும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் தங்கள் வீடுகளில் நாள் முழுவதும் ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க | இந்த காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி... ஹூண்டாயின் இந்த அறிவிப்புக்கு என்ன காரணம் தெரியுமா?

இருப்பினும், ஏசி வெடிப்பு போன்ற பல சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஏசி வெடிப்புகள் அரிதாக நடந்தாலும், இவை உயிர் சேதத்தை ஏற்படுத்துகிறது மற்றும் வீடு முழுவதும் தீ பரவ செய்கிறது. எனவே ஏசியை பயன்படுத்த பலர் மிகவும் பயப்படுகிறார்கள். வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஏசி உதவினாலும் அவற்றையும் முறையாக பராமரிக்க வேண்டும். நாம் செய்யும் சில தவறுகளால் கூட ஏசி வெடித்து சிதறும் அபாயம் ஏற்படலாம். ஏசி வெடிப்பதற்கான காரணங்களையும், இந்த அபாயத்தை எப்படி குறைக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஏசி வெடிப்புக்கான காரணம்?

ஏசியின் மின்தேக்கியின் அழுத்தம் மற்றும் அடைப்பு காரணமாக ஏசியில் இருந்து வெளியேறும் வெப்பம் வெளியேற முடியாமல் இருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் வெடிக்கும் அபாயம் அதிகம். ஏசி வெடிப்புக்கு மற்றொரு காரணம் மின்னழுத்தம் ஆகும். குறைந்த மின்னழுத்தம் அல்லது மின்சாரத்தில் ஏற்ற இறக்கம் இருந்தால் ஏசி வெடிக்க அதிக வாய்ப்புள்ளது. இது தவிர, ஏசிக்கு சரியான பராமரிப்பு இல்லை என்றாலும் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. ஏசியை நீண்ட நாள் சுத்தம் செய்யாமலோ அல்லது சர்வீஸ் செய்வதாலோ இருப்பது தவறு.

ஏசி வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்கு ஏசி வாங்க நினைத்தால் எப்போதும் விலை அதிகமாக இருந்தாலும் புதிதாக வாங்குங்கள். செகண்ட் ஹேண்ட் ஏசியை ஒருபோதும் வாங்க வேண்டாம். ஏனெனில் அதன் முந்தைய நிலை பற்றிய சரியான தகவல் இருக்காது, எனவே இவை ஆபத்தில் முடியலாம். அதே போல ஏசியை பிட் செய்யும் போது, ​​நல்ல தரமான வயரை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ஏசி வெடிக்கும் அபாயத்தை ஓரளவிற்கு குறைக்கலாம். உங்கள் வீட்டில் மின்சார பிரச்சனைகள் இல்லை என்றாலும் ஸ்டேபிலைசர் இல்லாமல் ஏசியை பயன்படுத்த வேண்டாம். ஸ்டேபிலைசர் மின்னழுத்தத்தில் அடிக்கடி ஏற்படும் ஏற்ற இறக்கங்களைத் தடுக்கிறது.

அதே போல ஏசி வாங்கி கொஞ்ச நாட்களே ஆகி இருந்தாலும் ஏசியை அவ்வப்போது சுத்தம் செய்து சர்வீஸ் செய்து கொண்டே இருங்கள். ஏசியில் தூசி மற்றும் அழுக்கு படிவதை அனுமதிக்காதீர்கள். மேலும் எவ்வளவு வெயில் இருந்தாலும் ஏசியை தொடர்ச்சியாக இயக்க வேண்டாம், ஒவ்வொரு 5-6 மணி நேரத்திற்கும் ஒரு முறை அணைத்துவிட்டு பிறகு ஆன் செய்யவும். முடிந்தவரை ஏசியின் கம்ப்ரசரை திறந்த பகுதியில் வைக்கவும். அப்போது அதன் வெப்பம் எளிதாக வெளியேறும். ஏசியில் இருந்து ஏதாவது வித்தியாசமான சத்தம் வந்தால் உடனே ஏசியை ஆப் செய்வது நல்லது. முக்கியமாக ஏசியை எப்போதும் 24 டிகிரியில் மட்டும் வைத்திருப்பது நல்லது. இது ஏசி நீண்ட நாட்கள் வர உதவும். 

மேலும் படிக்க | மதுரை டூ பத்ரி - கேதார்நாத்... IRCTC வழங்கும் பாரத் கவுரவ் யாத்திரை பேக்கேஜ்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News