Aadhaar Card Update: இந்திய குடிமக்களின் ஒரு அத்தியாவசிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. அனைத்து வித முக்கியமான பணிகளுக்கும் இப்போது ஆதார் அட்டை தேவைப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் பொருந்தக்கூடிய வகையில் இருக்க வேண்டி, தற்போது வரை பெரும்பாலான ஆதார் அட்டைகள் ஆங்கில மொழியில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இப்போது நீங்கள் விரும்பினால், அதை உங்கள் பிராந்திய மொழியிலும் பெற்றுக்கொள்ளலாம். பிராந்திய மொழியில் ஆதார் அட்டையை உருவாக்கும் வசதியையும் யுஐடிஏ (UIDAI) இப்போது வழங்கி வருகிறது.
இந்த மொழிகளில் ஆதாரை மாற்றிக்கொள்ள முடியும்
மக்கள் விரும்பினால் தங்கள் ஆதார் அட்டையை (Aadhaar Card) ஆங்கிலம், அசாமி, உருது, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஒரியா, கன்னடம், மலையாளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் மாற்றிக்கொள்ளலாம். ஆதாரில் மொழியை மாற்ற ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆதாரின் இந்த புதிய வசதியின் முழுமையான செயல்முறை பற்றி அறிந்து கொள்வோம்.
புதுப்பித்தல் செயல்முறை
- ஆதாரில் மொழியைப் புதுப்பிக்க, நீங்கள் முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://uidai.gov.in/ க்குச் செல்ல வேண்டும்.
- இங்கே 'Update Aadhaar' பிரிவின் கீழ், புள்ளிவிவர தரவை ஆன்லைனில் புதிப்பிப்பதற்கான இடத்தில் கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் 'Aadhaar Self Service Update Portal'-ஐ அடைவீர்கள்.
- இப்போது இந்த பக்கத்தில், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சா பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு 'send OTP'- ஐக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் 6 இலக்க ஒரு முறை கடவுச்சொல்லைப் பெறுவீர்கள்.
- இதன் பிறகு OTP ஐ உள்ளிட்டு லாக் இன் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- அடுத்த திரையில், புள்ளிவிவர தரவு புதுப்பிப்பு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
ALSO READ:Aadhaar Photo Change: ஆதாரில் புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய செயல்முறை இதோ
பெயர் மற்றும் முகவரி புதுப்பிப்பது எப்படி
அடுத்த பக்கத்தில் அனைத்து மக்கள்தொகை தரவுகளின் விவரங்களும் இருக்கும். இப்போது உங்கள் பிராந்திய மொழியைத் தேர்ந்தெடுக்கவும். பெயர் மற்றும் முகவரி தானாக தேர்ந்தெடுக்கப்படும். இப்போது பாப்அப்பில் புள்ளிவிவரங்களைப் புதுப்பிக்க கொடுக்கப்பட்ட செயல்முறையைப் பின்பற்றி உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். உங்கள் பெயர் ஏற்கனவே உள்ளூர் மொழியில் சரியாக எழுதப்பட்டிருந்தால், நீங்கள் இங்கு அதிக திருத்தம் செய்ய வேண்டி இருக்காது.
நீங்கள் எழுத்துப்பிழைகளை ஒரு முறை சரிபார்த்து திருத்தலாம். இதேபோல் முகவரியில் (Aadhaar Address) பிழை இருந்தாலும் திருத்திக்கொள்ளலாம். இப்போது கடைசியாக 'ப்ரெவ்யூ' என்பதை கிளிக் செய்து அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து மேலும் தொடரவும். இப்போது உங்கள் மொபைலில் ஒரு முறை கடவுச்சொல் வரும்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்
நீங்கள் ஆதார் அட்டையின் மொழியை மாற்ற விரும்பினால், இதற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இதற்கு உங்கள் டெபிட் / கிரெடிட் கார்டு அல்லது இணைய வங்கியைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்தலாம். இதற்குப் பிறகு, உங்கள் ஆதாரில் புதிய மொழி புதுப்பிப்புக்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்படும். இதன் பிறகு புதிய ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஆதார் அட்டையில் மொழியைப் புதுப்பிக்கும் செயல்முறைக்கு 1 முதல் 3 வாரங்கள் வரை ஆகலாம். நீங்கள் விரும்பினால், ஆதார் சேவை மையத்தின் மூலமும் உங்கள் மொழியை ஆதாரில் மாற்றிக்கொள்ளலாம்.
ALSO READ: ஒரே மொபைல் எண் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC Aadhaar Card-ஐ பெறலாம்: வழிமுறை இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR