ஆதார் அட்டை புதுப்பிப்பு: இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாகும். இது இல்லாமல் நம்மால் பல முக்கிய பணிகளை செய்து முடிக்க முடியாது. தற்போது பல அரசுப் பணிகளிலும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதாவது UIDAI மூலம் வழங்கப்படுகிறது. வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அல்லது அவ்வப்போது இடமாற்றம் செய்பவர்கள், அடிக்கடி ஆதார் அட்டையில் உள்ள முகவரியை பலமுறை புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்போது குடும்பத் தலைவர் மிக எளிதாக செய்து முடிக்கலாம்.
ஆதார் அட்டை
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) புதிய விதிகளின்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தாமல் மக்கள் இப்போது தங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றலாம். புதிய விதிகளின்படி, ஒருவர் குடும்பத் தலைவரின் (HOF) ஒப்புதலுடன் 'My Aadhaar' போர்ட்டலில் தனது முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.
ஆதார் அட்டை புதுப்பிப்பு
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், குடும்பத் தலைவரின் அனுமதியுடன் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை வழங்குகிறது. குடிமக்களின் பெற்றோரின் பெயர், கணவன் அல்லது மனைவி பெயர் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு உதவ இது வசதியாக இருக்கும். ஆதாரில் ஆன்லைனில் குடும்பத் தலைவரின் பெயரை எப்படி அப்டேட் செய்வது என்பது பற்றி இங்கே காணலாம்.
- முதலில் மை ஆதார் போர்ட்டலுக்கு செல்லவும். (https://myaadhaar.uidai.gov.in)
- ‘அப்டேட் அட்ரஸ்’ டேபுக்குச் செல்லவும்.
- இப்போது குடும்பத் தலைவரின் செல்லுபடியாகும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணைச் சரிபார்த்த பிறகு தேவைப்படும் சான்றைப் பதிவேற்றவும்.
- வெற்றிகரமான ரூ. 50 பரிவர்த்தனைக்குப் பிறகு, உங்களுக்கு சேவைக் கோரிக்கை எண் அனுப்பப்படும். மேலும் குடும்பத் தலைவர் முகவரிக் கோரிக்கை பற்றிய அலர்டை SMS மூலம் பெறுவார்.
- அலர்ட் கிடைத்த 30 நாட்களுக்குள் மை ஆதார் போர்ட்டலில் சைன் இன் செய்து கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டால், கோரிக்கை செயல்படுத்தப்படும்.
மேலும் படிக்க | இவர்கள் ஆதார் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்! ஆதார் ஆணையம் அறிவுறுத்தல்
ஆதார்
இதற்கிடையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சமீபத்தில் குழந்தைகளின் ஆதார் அட்டை தொடர்பான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இது பால் ஆதார் என்று அழைக்கப்படுகிறது. ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, ஐந்து வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளின் ஆதார் தரவுகளில் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும்.
ஆதார் பயோமெட்ரிக்
சமீபத்தில், UIDAI ட்வீட் மூலம் 5-15 வயதுடைய குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் என்றும், அதற்கான செயல்முறை இலவசம் என்றும் தெரிவித்திருந்தது. இது தவிர, பயோமெட்ரிக்ஸைப் புதுப்பித்த பிறகு குழந்தையின் ஆதார் எண்ணில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஆணையம் மற்றொரு ட்வீட்டில் அறிவித்துள்ளது. குழந்தைகளின் பயோமெட்ரிக் தரவுகளை அப்டேட் செய்யவும், படிவத்தை நிரப்பவும், அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் செல்லுமாறு பெற்றோருக்கு ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் உங்கள் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ