8th pay commission: மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்து அதற்கான அறிவிப்பினை பெற்றதையடுத்து, ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு தொடர்பாக மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது, அதாவது 8-வது ஊதியக் குழுவின் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அரசு கடந்த மார்ச் 24-ம் தேதியன்று, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது, இதன் மூலம் மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியக் குழு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இந்த தவறை பண்ணாதீங்க!
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதியக்குழுவின்படி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை பெற்று வருகின்றனர். இருப்பினும் ஊழியர்கள் பலரும் 8-வது ஊதியக் குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் 8வது ஊதியக்குழுவை அமல்படுத்தும் எண்ணம் கிடையாது என்று கடந்த ஆண்டே மத்திய அரசு தெளிவுபடுத்திய நிலையில் தற்போது அரசு 8வது ஊதியக்குழு குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பு ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
7வது ஊதியக் குழுவில் ஊழியர்களுக்கான 2.57 மடங்கு உள்ளது, இருப்பினும் 7வது ஊதியக் குழுவில் இதை 3.68 மடங்கு வரை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஒப்புக்கொண்டால் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும். அதுவே நான்காவது ஊதியக்குழுவில் ஊழியர்களின் சம்பளம், 27.6 சதவீதம் அதிகரித்து, குறைந்தபட்ச சம்பளம் ரூ.750 ஆக இருந்தது. அதேபோல், ஐந்தாவது ஊதியக்குழுவில், 31 சதவீதம் அதிகரித்து குறைந்தபட்ச சம்பளம் ரூ.2,550 ஆக உயர்த்தப்பட்டது. ஆறாவது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி 1.86 மடங்கு உயர்த்தப்பட்டது, அதே நேரத்தில் சம்பளம் 54 சதவீதம் அதிகரித்து குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000 ஆக இருந்தது. 7வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்கு இருந்த நிலையில், சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்து, குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. இப்போது 8வது ஊதியக் குழுவில் 3.68 மடங்கு ஃபிட்மென்ட் காரணியும், சம்பளம் 44.44 சதவீதம் அதிகரித்தால், குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 ஆக இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | லோன் முன்கூட்டியே கட்டி முடிக்கும்போது கனவத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ