7th Pay Commission முக்கிய அப்டேட்: 18 மாத டிஏ அரியர் தொகை விரைவில் கிடைக்கவுள்ளதா?

18 மாத அகவிலைப்படி அரியர் தொகைக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு தொகை வரும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 29, 2022, 01:17 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் நல்ல செய்தி வரக்கூடும்.
  • ஊழியர்களின் அகவிலைப்படி அரியர் தொகை குறித்த முக்கிய செய்தி வெளிவரவுள்ளது.
  • இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரத்தில் கலந்துரையாட மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருகிறது.
7th Pay Commission முக்கிய அப்டேட்: 18 மாத டிஏ அரியர் தொகை விரைவில் கிடைக்கவுள்ளதா? title=

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிக விரைவில் நிம்மதியான செய்தி வரக்கூடும். ஏற்கனவே அகவிலைப்படி அதிகரிப்பால் ஊழியர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. எனினும் மறுபுறம் ஒரு வித ஏமாற்றமும் உள்ளது. 

ஊழியர்களின் (Central Government Employees)18 மாத அகவிலைப்படி அரியர் குறித்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் இந்த விவகாரம் குறித்து விரைவில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 மாத அகவிலைப்படி அரியர் தொகைக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு தொகை வரும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி

7வது ஊதியக்குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படியைத் தவிர இன்னும் பல கூடுதல் நன்மைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அகவிலைப்படி அரியர் குறித்த விவகாரம் 18 மாதங்களாக நிலுவையில் உள்ளது. கூட்டு ஆலோசனை மெஷினரிகளின் தேசிய கவுன்சில் (JCM) செயலாளர் (பணியாளர் தரப்பு) சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், அகவிலைப்படி முடக்கம் நீக்கபட்டதுடன், 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அரியர் தொகையும் ஒரே முறையில் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில் அரசாங்கத்தின் முன் வைத்துள்ளதாகக் கூறினார். 

ALSO READ | PF கணக்கிலிருந்து இரண்டாவது முறையும் கோவிட் அட்வான்ஸ் எடுக்கலாம்: செயல்முறை இதோ

ஜேசிஎம் தேசிய கவுன்சில், பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதியமைச்சர் இடையே அரியர் தொகை (DA Arrear) தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக அறிக்கை மேலும் கூறுகிறது. ஆனால், உறுதியான பதில் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. ஊழியர்கள் கோரிக்கையில் இன்னும் உறுதியாக இருப்பதாகவும், அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எப்படியும், விரைவில் இது குறித்து அமைச்சரவை செயலாளருடன் கலந்துரையாடல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகவிலைப்படி அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்? 

- குறைந்தபட்ச கிரேட் பே ரூ. 1800 (லெவல்-1 அடிப்படை ஊதிய அளவு ரூ.18000 முதல் ரூ.56900 வரை) உள்ள மத்திய ஊழியர்கள் ரூ. 4320 [{18000 இல் 4 சதவீதம்} X 6]-க்காக காத்திருக்கின்றனர்.

- [{ரூ.56900-ன் 4 சதவீதம்}X6] என்ற கணக்கீட்டில் இருக்கும் ஊழியர்கள் ரூ. 13,656 என்ற தொகைக்கு காத்திருக்கிறார்கள். 

- 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச கிரேட் பேவில் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை ரூ. 3,240 [{18,000-ன் 3 சத்வீத}x6] என்ற அளவில் அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.

- [{ரூ. 56,9003-ன் 3 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டில் உள்ளவர்களுக்கு ரூ.10,242 கிடைக்கும்.

- ஜனவரி மற்றும் ஜூலை 2021 க்கு இடைப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், அது 4,320 [{ரூ. 18,000-ன் 4 சதவீதம்}x6] ஆக இருக்கும்.

- [{₹56,900-ன் 4 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டுக்கு தொகை ரூ.13,656 ஆக இருக்கும்.

நிலுவைத் தொகை குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார்

18 மாத நிலுவைத் தொகை குறித்த விவகாரம் பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இதைப் பற்றிய முடிவை பிரதமர் மோடி எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பு, நிலுவைத் தொகை குறித்த மத்திய ஊழியர்களின் நம்பிக்கையை மீண்டும் அதிகரித்துள்ளது. 
பிரதமர் மோடி 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், சுமார் 1 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பெரும் தொகை வரும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் (Pensioners) பலன் பெறுகின்றனர்.

ALSO READ | மத்திய அரசு ஊழியர்கள் இந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டாம்: இது உங்களுக்கு தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News