7th Pay Commission latest update: குடும்ப ஓய்வூதியத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. பெற்றோருக்காக ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் இரண்டு குடும்ப ஓய்வூதியங்களின் வரம்புகளை திருத்தியமைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது.
ஏழாவது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரையின் கீழ், அரசின் மிக உயர்ந்த ஊதியமான இதன் வரம்பு ஒரு மாதத்துக்கு ரூ.2,50,000 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
"இதன்படி, 01.01.2016 முதல் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoP&PW) பெற்றோர் இருவருக்கும், ஒரு குழந்தை/குழந்தைகளுக்கு வழங்கப்படும் இரண்டு குடும்ப ஓய்வூதியத்தின் அதிகபட்ச உச்சவரம்பு ஒரு மாதத்துக்கு ரூ. 1,25,000 (மேம்படுத்தப்பட்ட விகிதத்தில் சாதாரண குடும்ப ஓய்வூதியமான ரூ. 2,50,000/- இல் 50%) மற்றும் (சாதாரண குடும்ப ஓய்வூதியமான ரூ. 75,000/-இல் 30%) ஆக திருத்தப்பட்டுள்ளது.
ALSO READ: 7th Pay Commission அப்டேட்: 1.5 கோடி ஊழியர்களுக்கு அதிகரித்தது VDA: கணக்கீடு இதோ
பாதுகாப்பு அமைச்சகத்தின் 29.10.2021 தேதியிட்ட உத்தரவின்படி, DoP&PW முதல் உத்தரவை அமல்படுத்தியது. 01.01.2016 அன்று ஆயுதப் படைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இது அமல்படுத்தப்பட்டது" என்று ஒரு அதிகாரப்பூர்வ வெளியீடு கூறுகிறது.
முன்னதாக, செப்டம்பர் மாதம், பாதுகாப்பு அமைச்சகம், மனநலம் அல்லது உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்/உடன்பிறப்புகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான வருமான அளவுகோலை அதிகரிக்க முடிவு செய்தது.
அதன்படி, குடும்ப ஓய்வூதியம் (Family Pension) அல்லாத பிற ஆதாரங்களில் இருந்து பெறப்படும் அவரது ஒட்டுமொத்த வருமானம், குடும்ப ஓய்வூதியத்தை விட சாதாரண விகிதத்தில், அதாவது இறந்த அரசு ஊழியரின் கடைசி ஊதியத்தில் 30% மற்றும் அகவிலை நிவாரணத்தை விட குறைவாக இருந்தால், அத்தகைய குழந்தை/உடன்பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாவார்கள்.
அத்தகைய சந்தர்ப்பங்களில் நிதி நன்மை 08.02.2021 முதல் அமலுக்கு வரும். தற்போது, மாற்றுத்திறனாளி குழந்தை/உடன்பிறந்தவர்களின் ஒட்டுமொத்த மாத வருமானம் குடும்ப ஓய்வூதியம் (Pension) அல்லாத பிற ஆதாரங்களில் இருந்து ரூ. 9,000-க்கு மிகாமல் இருந்தால், ஊனமுற்ற குழந்தை/உடன்பிறந்தோர் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாவார்கள்.
ALSO READ:7th Pay Commission: ஊழியர்களின் கிராஜுவிட்டியில் சூப்பர் ஏற்றம், முழு கணக்கீடு இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR