காதல் ஆசை காட்டி 65 வயது தாத்தாவிடம் ₹46 லட்சம் ஆட்டைய போட்ட பெண்!!

டேட்டிங் ஆசையால் இளம்பெண்ணிடம் மூன்று நாட்களில் ₹46 லட்சத்தி பறிகொடுத்த 65 வயது தாத்தா!!

Last Updated : Apr 11, 2019, 02:19 PM IST
காதல் ஆசை காட்டி 65 வயது தாத்தாவிடம் ₹46 லட்சம் ஆட்டைய போட்ட பெண்!! title=

டேட்டிங் ஆசையால் இளம்பெண்ணிடம் மூன்று நாட்களில் ₹46 லட்சத்தி பறிகொடுத்த 65 வயது தாத்தா!!

பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்றாலே ஆண்களுக்கு ஒரு விதமான குஷி தான் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை. தற்போது, டேட்டிங் செய்வதற்காகவே இணையதாலத்தில் பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்துள்ளனர். அதில் சில  அதிகாரப்பூர்வமான கணக்குகள், சில போலி கணக்குகளாகவும் இருக்கும். அந்தவகையில் சமீபத்தில் மும்பையை சேர்ந்த 65 வயது தாத்தா ஒருவர் பெண்ணுடன் டேட்டிங் செல்ல விரும்பி ரூ 46 லட்சம் பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, அந்த முதியவர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில்; "தான் ஒரு கிளாசிபைடு வெப்சைட்டில் பார்த்தபோது, டேட்டிங் செய்வதற்காக ஒரு வெப்சைட் குறித்த விளம்பரம் இருந்தது அந்த வெப்சைட்டிற்கு சென்று பார்த்தேன் அங்கு பதிவு செய்யசொல்லி கேட்டிருந்தது. நானும் பெண்களுடன் டேட்டிங் செய்ய விரும்பி பதிவு செய்தேன். 

பதிவு செய்த சில மணிநேரங்களில் மீரா என்ற பெண் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார். அவர் என்னிடம் 3 பெண்களின் போட்டோக்களை அனுப்பி அதில் எனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்யுமாறு கூறினார். அதன் பின் அந்த பெண்ணை சந்திக்க ரூ 25,500 கட்ட வேண்டும் என சொன்னார், அதையும் கட்டினேன். 

அதன் பின் பிரைவசி பீஸ் என ரூ 82,500, வீடியோகால் இன்சூரன்ஸ் 1.75 லட்சம், நான் தேர்வு செய்த பெண்ணுடனான 1 வருட காண்ட்ராக்ட் ரூ 2.85 லட்சம், புரோபைல் வெரிபிகேஷனிற்கு ரூ5.50 லட்சம், பிரிமியம் மெம்ஷிப்பிற்காக ரூ 26.50 லட்சம் மற்றும் 50 ஆயிரம் எக்ஸ்ட்ரா சார்ஜ், என மொத்தம் அவர்கள் என்னிடம் ரூ 38.17 லட்சம் வாங்கினர். 

அதன் பின் நான் தேர்வு செய்த ரோஸி என்ற பெண் என்னுடன் இரண்டு முறைபோனில் பேசினார். அதன்பின்பு மீண்டும் கால் செய்த மீரா என்ற பெண், நான் பேசிய ரோஸி என்ற பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறதா என கேட்டார் நானும் பிடித்திருக்கிறது என சொன்னேன். 

அவர் இந்த பெண்ணின் புரோபைல் மற்றவர்களுக்கும் ஷேர் ஆகிறது. அப்படி ஷேர் செய்யாமல் அந்த பெண் என்னுடன் மட்டும் டேட்டிங் செய்ய ரூ7.85 லட்சம் கட்ட வேண்டும் என கூறினார். அதையும் நான் கட்டினேன். ஆனால் பின்பு அவர்கள் எந்த வித தொடர்பும் மேற்கொள்ளவில்லை" என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து குறிப்பிட்ட வெப்சைட்டை நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Trending News