திருப்பதியில் ஜூன் மாதத்தில் ஏழுமலையானின் தரிசனத்திற்கான 300 ரூபாய் டிக்கெட் இன்று ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்படுவதாகவும், பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
TTD will release the Rs.300 online quota for the month of June on May 21 by 9am.
Everyday 5000 tickets will be available.
Devotees are requested to make note of this and book Darshan tickets in advance.
— TTD Seva (@ttd_seva) May 20, 2021
பக்தர்கள் வெங்கடாசலபதியை தரிசனம் செய்வதற்காக 300 ரூபாய் டிக்கெட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாத தரிசனத்திற்கான 300 ரூபாய் டிக்கெட்க்கான பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது.
Also Read | திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் கொடுக்கும் முடி காணிக்கையின் மதிப்பு என்ன? தெரியுமா?
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இலவச தரிசனம் ஏப்ரல் மாதம் 12-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால், ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீ வெங்கடாசலதியை இலவச தரிசனம் செய்வது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
Also Read | Tripathi Balaji: திருப்பதி தெய்வத்தின் சனிக்கிழமை பக்தி உலா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR