ரஜினி கூறிய படி இதுதானா #2Point0-ன் ஒரிஜினல் ரலீஸ் தேதி?

#2Point0-ன் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன

Last Updated : Feb 8, 2018, 04:50 PM IST
ரஜினி கூறிய படி இதுதானா #2Point0-ன் ஒரிஜினல் ரலீஸ் தேதி? title=

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிவரும் 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 2.0 படம் எப்போது வெளியாகும் என்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 
# 2Point0 ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியிடப்படம் என்று தெரிவித்து உள்ளார்.

Trending News